வில்லியனுாரில் இரு விபத்து வாலிபர், மூதாட்டி பலி

Added : ஜன 14, 2020
Advertisement

புதுச்சேரி:வில்லியனுாரில் இரு வேறு இடங்களில் நடந்த விபத்துகளில் வாலிபர் உள்ளிட்ட இருவர் இறந்தனர்.
புதுச்சேரி ராமநாதபுரம், மாஞ்சோலை வீதியைச் சேர்ந்தவர் அப்பாராவ்,36; இவர் கடந்த 11ம் தேதி மதியம் தனது நண்பர் சதிஷ்,35; என்பவருடன் புதுச்சேரி ரயில் நிலையம் சென்று, ஆந்திரா செல்ல டிக்கெட் முன்பதிவு செய்துவிட்டு, வீட்டிற்கு பைக்கில் சென்றுக் கொண்டிருந்தனர். வழுதாவூர் சாலையில் ஊசுட்டேரி அருகே, லட்சுமிநாராயணா மருத்துவ கல்லுாரி அருகே சென்றபோது, அவ்வழியே வந்த டி.என்.20.டபிள்யு.9075 பதிவெண் கொண்ட மாருதி கார் மோதியது. அதில் துாக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த அப்பாராவ் மற்றும் சதீஷை அப்பகுதி மக்கள் மீட்டு ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். செல்லும் வழியில் அப்பாராவ் இறந்தார். சதீஷ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மற்றொரு சம்பவம்கண்டமங்கலம், மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பானுமதி,65. கடந்த 35 ஆண்டுகளாக தனியாக வசித்து வரும் இவர் கடந்த 11ம் தேதி வில்லியனுாரில் உள்ள உறவினர் வீட்டிற்கு செல்ல பி.ஒய்.01.ஏ.ஓய்.9369 பதிவெண் கொண்ட பஸ்சில் வந்து கோட்டைமேடு பஸ் நிறுத்தத்தில் இறங்கினார். பஸ்சின் முன் சென்று சாலையை கடக்க முயன்றபோது, எதிர்பாராத விதமாக பஸ் மூதாட்டி மீது மோதியது. இதில், கீழே விழுந்த மூதாட்டி மீது பஸ்சின் முன்சக்கரம் ஏறி இறங்கியதில், அவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி இறந்தார்.இரு விபத்துகள் குறித்தும் வில்லியனுார் போக்குவரத்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X