நாட்டு வெடிகுண்டு விவகாரம் போலீசார் தீவிர விசாரணை 

Added : ஜன 14, 2020
Advertisement

புதுச்சேரி:முத்தியால்பேட்டையில் நாட்டு வெடிகுண்டு வெடித்த சாம்பவம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
பெரியமுதலியார்சாவடியைச் சேர்ந்தவர் செல்வம்,40; குப்பை பொறுக்கும் இவர், நேற்று முன்தினம் முதலியார்சாவடி முதல் முத்தியால்பேட்டை வரை சேகரித்த பிளாஸ்டிக், இரும்புகளை காட்டாமணிக்குப்பம், பெருமாள் நாயுடு வீதியில் உள்ள பழைய இரும்பு அருகே கொட்டி தரம் பிரித்தார்.அப்போது, அட்டை பெட்டியில் இருந்த நாட்டு வெடிகுண்டு ஒன்று வெடித்து சிதறியது. அதில், செல்வத்தின் இடது கை, மோதிர விரல் துண்டானது. உடன் அவர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இதுகுறித்து முத்தியால்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து, வெடிகுண்டை யார், எதற்காக குப்பை தொட்டியில் பதுக்கி வைத்தனர் என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.இதற்காக, அந்த வெடிகுண்டு எங்கிருந்து எடுக்கப்பட்டது என்பதை அறிவதற்காக,மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குப்பை பொறுக்கும் தொழிலாளி செல்வத்திடம் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். மேலும், முதலியார்பேட்டை மற்றும் முதலியார் சாவடி பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்திட போலிசார் முடிவு செய்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X