பொது செய்தி

தமிழ்நாடு

வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்:புதியதாக இணைய 12,305 பேர் ஆர்வம்

Added : ஜன 14, 2020
Advertisement

உடுமலை:உடுமலை, மடத்துக்குளம் தொகுதிகளில் நடந்த, வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்களில், புதிதாக இணைய, 12,305 பேர் விண்ணப்பித்துள்ளனர்.உடுமலை, மடத்துக்குளம் தொகுதிக்கான வரைவு வாக்காளர் பட்டியல், கடந்த மாதம், 23ம் தேதி வெளியிடப்பட்டு, ஓட்டுச்சாவடிகள், தாலுகா அலுவலகம், வி.ஏ.ஓ., அலுவலகம், நகராட்சி, ஊராட்சி அலுவலகங்களில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.வாக்காளர் பட்டியலில், பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் உள்ளிட்ட பணிகள், வரும், 22ம் தேதி வரை மேற்கொள்ளலாம், என தேர்தல் கமிஷன் அவகாசம் வழங்கியுள்ளது.மேலும், இரண்டு கட்டமாக, 4,5 மற்றும் 11,12 ஆகிய தேதிகளில், ஓட்டுச்சாவடிகளில் சிறப்பு முகாம்கள் நடந்தன.உடுமலை தொகுதியிலுள்ள, 293 ஓட்டுச்சாவடிகளிலும், மடத்துக்குளம் தொகுதியிலுள்ள, 287 ஓட்டுச்சாவடிகளிலும். இம்முகாம்கள் நடந்தன. இதில், உடுமலை தொகுதியில், பெயர் சேர்க்க, 6,742 பேரும், பெயர் நீக்க, 573 பேர், திருத்தம் மேற்கொள்ள, 774 பேர், ஒரே தொகுதியில் முகவரி மாற்றம் செய்ய, 531 பேர் என, மொத்தம், 8,622 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.மடத்துக்குளம் தொகுதியில், பெயர் சேர்க்க, 5,563 பேரும், பெயர் நீக்க, 175 விண்ணப்பங்களும், திருத்தம் மேற்கொள்ள, 684 விண்ணப்பங்களும், ஒரே தொகுதியில் முகவரி மாற்றம் செய்ய, 213 விண்ணப்பங்கள் என, 6,635 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.இரு தொகுதிகளிலும், நடந்த சிறப்பு முகாம்களில், மொத்தம், 15,257 பேர் படிவங்களை பெற்று, பூர்த்தி செய்து வழங்கியுள்ளனர். இதில், புதிய வாக்காளர்களாக இணைய, 12,305 பேர் ஆர்வம் காட்டியுள்ளனர்.அதிகாரிகள் கூறுகையில்,' வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள், வரும், 22 வரை நடக்கிறது. சிறப்பு முகாம்களில் விண்ணப்பிக்காதவர்கள், தாலுகா அலுவலகங்களிலும், தேர்தல் ஆணைய மொபைல் ஆப் (nvsp) மற்றும் இணைய தளம் மூலமும், புதிதாக இணையவும், திருத்தம் மேற்கொள்ளவும் விண்ணப்பிக்கலாம்.பெறப்பட்ட படிவங்கள், சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மூலம் கள ஆய்வு செய்து, சேர்த்தல், நீக்கல், திருத்த பணிகள் மேற்கொண்டு, வரும் பிப்.,14ம் தேதி, இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X