பொது செய்தி

இந்தியா

பாரதிதாசன் மகளிர் கல்லுாரியில்பொங்கல் விழா கொண்டாட்டம்

Added : ஜன 14, 2020
Advertisement
 பாரதிதாசன் மகளிர் கல்லுாரியில்பொங்கல் விழா கொண்டாட்டம்

புதுச்சேரி:பாரதிதாசன் அரசு மகளிர் கல்லுாரியில் பொங்கல் விழா நேற்று கொண்டாடப்பட்டது.
பொங்கல் விழாவை முன்னிட்டு சேலை, தாவணி போன்ற தமிழர்களின் பாரம்பரிய உடைகளை மாணவிகள் அணிந்து வந்திருந்தனர். கல்லுாரியின் அனைத்து துறை மாணவிகளும் திரண்டு, கரும்பு, மஞ்சள் வைத்து புதிய பானையில் பொங்கல் வைத்தனர். பொங்கலோ பொங்கல் என உற்சாகமாக கோஷமிட்டு மகிழ்ந்தனர். கல்லுாரி முதல்வர் சுப்ரமணி தலைமை தாங்கி, பொங்கலை படையலிட்டார்.பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 'ஒரே பாரதம் உன்னத பாரதம்' அமைப்பு சார்பில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. மாணவி ஹரிதா வரவேற்றார். மாணவிகள் அனிஷ்ய பிரேமி, செந்தமிழ் ஆகியோர் டாமன் யூனியன் பிரதேசத்தின் வரலாறு, கலாசாரம் குறித்து பேசினர்.
தொடர்ந்து, மாணவிகள் நுாருல் முபீனா, ஜனனி ஆகியோர் டாமனின் பாரம்பரிய உடை அணிந்து நடனம் ஆடினர். மாணவி அருந்ததி பரத நாட்டியமாடினார். மாணவி திவ்யா நன்றி கூறினார்.விழா ஏற்பாடுகளை, 'ஒரே பாரதம் உன்னத பாரதம்' அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பு அதிகாரி அலமேலு மங்கை, கல்லுாரி ஒருங்கிணைப்பு அலுவலர் உமாராணி ஆகியோர் செய்திருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X