பொது செய்தி

இந்தியா

அலையில் இழுத்துச் செல்லப்பட்ட மாணவர் உடல் கரை ஒதுங்கியது

Added : ஜன 14, 2020
Advertisement

புதுச்சேரி:பெரியக்காலாப்பட்டு கடலில் குளித்தபோது, ராட்சத அலையில் சிக்கி இழுத்து செல்லப்பட்ட மாணவர் உடல் நேற்று காலை கரை ஒதுங்கியது.
கடலுார், சோனாங்குப்பத்தை சேர்ந்தவர் கார்த்தி-உஷாநந்தினி தம்பதியரின் மகன் வசந்த்,16; கடந்த ஐந்தாண்டிற்கு முன் உஷாநந்தினி இறந்ததையொட்டி, வசந்த், புதுச்சேரி, பெரியக்காலப்பட்டில் உள்ள தனது தாத்தா ஆனந்தவீரன் வீட்டில் தங்கி, அங்குள்ள செவாலியே செல்லான் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார்.இவர், நேற்று முன்தினம் மதியம் 2:00 மணிக்கு, தனது நண்பர்களுடன் பெரியகாலாப்பட்டு கடற்கரைக்கு சென்று குளித்துள்ளார். அப்பொழுது ஏற்பட்ட ராட்சத அலை, வசந்த் கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டார். உடன், அப்பகுதி மீனவர்கள் கடலில் இறங்கி வெகு நேரம் தேடியும் வசந்த்தை மீட்க முடியவில்லை.
இதுகுறித்த புகாரின் பேரில் காலாப்பட்டு போலீசார் வழக்கு பதிந்து மாணவர் வசந்த்தை தேடிவந்தனர்.இந்நிலையில் மாணவர் வசந்த் உடல் நேற்று காலை பெரியக்காலாப்பட்டு கடற்கரையில் கரை ஒதுங்கியது. தகவலறிந்த காலாப்பட்டு போலீசார் விரைந்து சென்று, மாணவர் வசந்த் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று பிரேத பரிசோதனை செய்த பின், உடலை அவரது உறவினர்களிடம் ஒப்படைத்தனர். காலாப்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X