தந்தை கண்டிப்பு மகன் மாயம்

Added : ஜன 14, 2020
Advertisement

புதுச்சேரி:தந்தை திட்டியதால் மாயமான மகனை போலீசார் தேடிவருகின்றனர்.வில்லியனுார் அடுத்த கணுவாப்பேட், புதுநகரை சேர்ந்தவர் மூர்த்தி,39; கொத்தனார்.
இவரது மனைவி சுகுணா. ஆரியப்பாளையத்தில் உள்ள தனியார் அட்டை கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவர்களது மகன் வின்னரசன்,16; 9ம் வகுப்பில் தோல்வி அடைந்ததால் கடந்த ஓராண்டாக பள்ளிக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்தார். அதனை அவரது தந்தை மூர்த்தி கடந்த மாதம் கண்டித்தார்.இதனால் கோபமடைந்த வின்னரசன், கடந்த டிசம்பர் 4ம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை.இதுகுறித்து மூர்த்தி அளித்த புகாரின் பேரில் வில்லியனுார் போலீசார் வழக்கு பதிந்து, மாணவர் வின்னரசனை தேடிவருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X