பொது செய்தி

தமிழ்நாடு

அரசு பள்ளிகளுக்கு இன்று உள்ளூர் விடுமுறை

Added : ஜன 14, 2020
Advertisement

உடுமலை:உடுமலை கல்வி மாவட்டத்தில், பொங்கல் திருநாளையொட்டி, அரசு பள்ளிகளுக்கு இன்று உள்ளூர் விடுமுறை அளித்துள்ளனர்.பள்ளிகளுக்கு பொங்கல் விடுமுறை தினமாக, வரும், 15 ம்தேதி முதல், 17ம் தேதி வரை உறுதியாக அறிவிக்கப்பட்டது. பொங்கல் திருநாளின் முன்தினமான போகிக்கு, விடுமுறையாக பள்ளிகளுக்கு அறிவிக்கப்படவில்லை.உடுமலை கல்வி மாவட்டத்தில், 254 அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் உள்ளன. பொங்கல் விடுமுறை குறித்து நேற்று மாலை வரை, கல்வித்துறையிடமிருந்து உறுதியான தகவல்கள் அனுப்பப்படவில்லை.உடுமலை சுற்றுப்பகுதி பள்ளிகளில், மறையூர், மூணார், வால்பாறை உள்ளிட்ட பகுதிகளிலிருந்தும் மாணவர்கள் விடுதிகளில் தங்கி படிக்கின்றனர். இதனால், மாணவர்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல, இன்று உள்ளூர் விடுமுறை விடுவதற்கு பள்ளி நிர்வாகங்கள் திட்டமிட்டு, அதற்கான அனுமதியும் பெற்றுள்ளனர்.இன்று விடுமுறைக்கு மாற்றாக, 25ம்தேதி பள்ளிகள் செயல்படுத்திக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளனர். இன்று விடுமுறையாக இருக்கும் பள்ளிகளில், நேற்று மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பொங்கல் வைத்து, கலைநிகழ்ச்சிகளோடு கொண்டாடினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X