பொது செய்தி

தமிழ்நாடு

கல்லுாரிகளில் பொங்கல் கொண்டாட்டம்

Added : ஜன 14, 2020
Advertisement

உடுமலை:உடுமலை கல்வி மாவட்ட பள்ளி, மற்றும் கல்லுாரிகளில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.பள்ளி மற்றும் கல்லுாரிகளில் பொங்கல் விழா கொண்டாடும் விதமாக, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து, பொங்கல் வைத்தும், கலைநிகழ்ச்சிகளும்நடத்தினர்.சோமவாரப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், பொங்கல் விழா நடந்தது. இதில் மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பாண்டியன், குடிமங்கலம் ஒன்றியக்குழு தலைவர் சுகந்தி, ஊராட்சித்தலைவர் விமலா, தலைமையாசிரியர் கோப்பெருந்தேவி, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர் பங்கேற்றனர்.ஆசிரியர்கள், பொங்கல் பண்டிகை கொண்டாடுவதன் முக்கியத்துவம் குறித்து பேசினர்.ஜி.வி.ஜி.,விசாலாட்சி பெண்கள் கல்லுாரியில், பொங்கல் பண்டிகையையொட்டி, மாணவியர் பாரம்பரிய உடை அணிந்து, குலவைவிட்டு, கல்லுாரி முதல்வர் கலைச்செல்வி, பேராசிரியர்கள் மற்றும் கல்லுாரி செயலாளர் ரவீந்திரன் முன்னிலையில் பொங்கல் வைத்தனர்.கோமாதா பூஜை நடத்தினர். தொடர்ந்து மாணவியரின், கும்மியாட்டம், கோலாட்டம், கம்பு சுற்றுதல், நடன நிகழ்ச்சி மற்றும் உறியடி, கயிறு இழுத்தல் போட்டி நடந்தது.உடுமலை, வட்டார கல்வி அலுவலகத்தில், அலுவலர்கள், சரவணக்குமார், பிரிட்டோ மற்றும் பணியாளர்கள், பொங்கல் வைத்து கொண்டாடினர்.சமத்துவ பொங்கல்பாரம்பரிய கலைகளோடு, சமத்துவ பொங்கல் விழா, ராஜாவூர் ராம்சந்திர மிஷன் ஆசிரமத்தில் கொண்டாடப்பட்டது.உடுமலை ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா (விவசாய வளர்ச்சி)கிளை, சேரன் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் சார்பில், சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. வங்கி கிளை மேலாளர் மெய்யப்பன் தலைமை வகித்தார். உதவி மேலாளர் திருக்கல்யாணமலர் முன்னிலை வகித்தார். ராஜாவூர் ராம்சந்திர மிஷன் ஆசிரமத்தில் நடந்த நிகழ்ச்சியில், கிராம இளைஞர்களின், தேவராட்டம், சலகெருது மறித்தல் போன்ற பாரம்பரிய கலைகள் நடத்தப்பட்டது.பின்னர், சமத்துவ பொங்கல் வைத்து, வழிபாடு நடத்தினர். மக்களுக்கு பொங்கல் வழங்கி, கொண்டாடினர். பொங்கல் கொண்டாடுவதன் பாரம்பரியம் குறித்து, சேரன் உழவர் உற்பத்தியாளர் நிறுவன இயக்குனர் குணசேகரன், நிர்வாகிகள், ராதாகிருஷ்ணன், சுந்தர்ராஜ் விளக்கமளித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X