பொது செய்தி

தமிழ்நாடு

மலைவாழ் மக்களுக்கு தொழிற்பயிற்சி முகாம்: அழகு பொருட்கள் தயாரிப்பு விளக்கம்

Added : ஜன 14, 2020
Advertisement

உடுமலை:மலைவாழ் மக்கள் குடியிருப்பு பகுதிகளில் கிடைக்கும் பொருட்களிலிருந்து, அழகு பொருட்கள், பாரம்பரிய உணவு பொருட்கள் தயாரித்தல் குறித்த பயிற்சி முகாம் நடந்தது.ஆனைமலை புலிகள் காப்பகம், கோடந்துார் மலைவாழ் மக்கள் குடியிருப்பில், மத்திய அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் அமைச்சகத்தின் கோவை கிளை, சிறு தொழில் வளர்ச்சி நிலையம் மற்றும் பசுமைசாரா இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை சார்பில், இரண்டு நாள் தொழில் ஊக்குவிப்பு பயிற்சி முகாம் நடந்தது.மலைக்கிராமங்களில் கிடைக்கக்கூடிய மூலப்பொருட்களை கொண்டு, இயற்கை உணவு, மருத்துவ குணம் கொண்ட உணவு வகைகள், வீட்டு பயன்பாட்டிற்கான பொருட்கள், அலங்கார பொருட்கள் உற்பத்தி செய்தல், தொழில் நுட்ப ஆலோசனைகள் மற்றும் சந்தைப்படுத்துதல் குறித்து மலைவாழ் மக்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.பசுமை மாறா இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை செயலாளர் கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தார்.கோவை, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிலையம் (எம்.எஸ்.எம்.இ.,) உதயகுமார் பேசியதாவது: சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர் திறன் மேம்பாட்டிற்கான, ஆலோசனை, வங்கி கடன் வசதி, சந்தைப்படுத்துதல் உள்ளிட்ட வழிகாட்டுதல்கள் வழங்கப்படுகிறது.பாரத பிரதமரின் வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டத்தின் கீழ், உற்பத்தி சார்ந்த தொழில்களுக்கு வங்கிகள் மூலம், 25 லட்சம் ரூபாய் வரையும், சேவைத்தொழில்களுக்கு, 10 லட்சம் ரூபாய் வரையிலும், மாவட்ட கலெக்டரின் டாஸ்க் போர்ஸ் கமிட்டி மூலம் பரிந்துரை செய்யப்படுகிறது. 10 லட்சம் ரூபாய் வரை கடன் பெற, கல்வித்தகுதி, பிணையம்,வயது வரம்பு தேவையில்லை. கடன் உதவியுடன், மானிய உதவியும் வழங்கப்படுகிறது.இவ்வாறு, அவர் பேசினார்.குறைந்த முதலீட்டில் தயாரிக்கப்படும் பொருட்கள் மற்றும் அவற்றை சந்தைப்படுத்துல் குறித்து, தொழில் துறை ஆலோசகர்கள், தருணன், பஞ்சநாதன் பயிற்சியளித்தனர்.ஜல்லிபட்டி எஸ்.பி.ஐ., வங்கி துணை மேலாளர் சுபாஷினி, வணிக தொடர்பு அலுவலர் வெங்கடேஷ், உடுமலை வனவர் சுப்பையா, கோடந்துார் கிராம வனக்குழு தலைவர் சடையப்பன், பசுமை மாறா அறக்கட்டளை ஆலோசகர் சிவக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X