பொது செய்தி

தமிழ்நாடு

பள்ளிகளில் சாய்தள வசதி நிதி ஒதுக்கீட்டுக்கு பட்டியல்

Added : ஜன 14, 2020
Advertisement

உடுமலை:உடுமலை கல்வி மாவட்ட பள்ளிகளில் சாய்தள வசதி அமைப்பதற்கு பட்டியல் அனுப்பப்பட்டுள்ளது.உடுமலை கல்வி மாவட்டத்தில், உடுமலை, குடிமங்கலம் மற்றும் மடத்துக்குளம் ஒன்றியப்பள்ளிகள் உள்ளன. பள்ளிகளில், மாணவர்களுக்கான அடிப்படை வசதிகளாக, கட்டமைப்பு, குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள் செய்யப்படுகிறது. கட்டமைப்புகள் மற்றும் கழிப்பறைகளில், மாற்றுத்திறன் கொண்ட மாணவர்கள் பயன்படுத்துவதற்கான வசதிகளையும் ஏற்படுத்த வேண்டும்.மாற்றுத்திறன் கொண்ட மாணவர்கள் பள்ளிக்குள் செல்வதற்கு சாய்தள வசதி ஏற்படுத்த வேண்டும். சில பள்ளிகளில் பல ஆண்டுகளாகியும் இவ்வசதி ஏற்படுத்தப்படவில்லை.இதனால், குழந்தைகள் வகுப்பறைக்குள் நுழைவதற்கே சிரமப்பட்டனர். அனைவருக்கும் கல்வி இயக்ககம் சார்பில், கட்டமைப்பு வசதிகள் அமைப்பதற்கு, கல்வியாண்டுதோறும் நிதிஒதுக்கீடு வழங்கப்படுகிறது. நடப்பாண்டில், உடுமலை கல்வி மாவட்ட பள்ளிகளில் சாய்தள வசதி அமைப்பதற்கு நிதிஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இதன்படி, உடுமலை, குடிமங்கலம் மற்றும் மடத்துக்குளம் ஒன்றியங்களில் சாய்தளம் இல்லாத பள்ளிகளின் பட்டியல் அனைவருக்கும் கல்வி இயக்கத்தினர் தயார் செய்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X