பொது செய்தி

இந்தியா

புகையில்லா போகியை வலியுறுத்தி விழிப்புணர்வு வாகன பேரணி

Added : ஜன 14, 2020
Advertisement

புதுச்சேரி:புதுச்சேரியில் புகையில்லா போகி கொண்டாட வலியுறுத்தி, இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நடந்தது.

பொங்கல் பண்டிகைக்கு முதல் நாள் போகி கொண்டாடப்படுகிறது. அன்றைய தினத்தில் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் உள்ள தேவையற்ற பொருட்களை எரிப்பது வழக்கம்.அதில், பிளாஸ்டிக், ரப்பர், டயர் உள்ளிட்ட பொருட்களை எரிப்பதால், காற்று மாசு ஏற்படுகிறது.இதை தவிர்க்கும் வகையில் புகையில்லா போகி கொண்டாட வலியுறுத்தியும், போகி பண்டிகையன்று, ரப்பர் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை எரிப்பதை தவிர்க்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், சட்டப்பணிகள் ஆணைய சட்ட தன்னார்வலர் ஆனந்தன் இருசக்கர பேரணிக்கு ஏற்பாடு செய்தார்.புதுச்சேரி காந்தி சிலை அருகே துவங்கிய பேரணியை மாசுகட்டுப்பாட்டு குழும சுற்றுச்சூழல் முதுநிலைபொறியாளர் ரமேஷ் துவக்கி வைத்தார். 4 பெண்கள் உட்பட 15 தன்னார்வலர்கள் இருசக்கர வாகனத்தில் சுற்றுச்சூழல் மற்றும் மாசு கட்டுப்பாட்டு விழிப்புணர்வு பயணம் மேற்கொண்டனர்.காந்தி சிலையில் இருந்து புறப்பட்ட பேரணி மரப்பாலம், அரியாங்குப்பம், தவளக்குப்பம், கிருமாம்பாக்கம், பாகூர், கரிக்கலாம்பாக்கம், மங்கலம், கண்டமங்கலம், மதகடிப்பட்டு, திருபுவனை, திருக்கனுார், ஆரோவில், காலாப்பட்டு வழியாக மீண்டும் புதுச்சேரி வந்தடைந்தது.பேரணியின்போது, வழிநெடுகிலும் துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.பேரணி துவக்க நிகழ்ச்சியில் சமூக சேவகர் பாலமுருகன், கமலக்கண்ணன், ராதாகிருஷ்ணன், திருவேங்கடம், ராமலிங்கம், ஜெயலட்சுமி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆர்வலர் சீத்தாராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X