பொது செய்தி

இந்தியா

சர்வதேச ஷாப்பிங் அனுபவம் தந்த 'தினமலர் கண்காட்சி' நிறைவு

Added : ஜன 14, 2020
Advertisement

புதுச்சேரி:புதுச்சேரியில், 'ஏசி' அரங்கில் குளு குளு ஷாப்பிங், குழந்தைகளை குஷிப்படுத்திய விளையாட்டுகள், நாவிற்கு சுவையூட்டிய வகை வகையான உணவுகள் என, சர்வதேச ஷாப்பிங் அனுபவத்தை தந்து, மக்கள் உள்ளங்களை கவர்ந்த 'தினமலர் "ஸ்மார்ட் ஷாப்பர்ஸ்' எக்ஸ்போ' நேற்றுடன் இனிதே நிறைவடைந்தது.
'தினமலர்' நாளிதழ், புதுமையான, 'ஷாப்பிங்' அனுபவத்தை மக்களுக்கு வழங்க, ''ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் எக்ஸ்போ'' எனும் மாபெரும் வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சியை, புதுச்சேரி - கடலுார் சாலையில், ஏ.எப்.டி., மைதானத்தில் கடந்த 9ம் தேதி முதல், நேற்று வரையில் ஐந்து நாட்கள் நடத்தியது.கண்காட்சியில் சிறுவர்களுக்கான விளையாட்டு பொம்மைகள் முதல் கார் வரையில், கிடைக்காத பொருட்களே இல்லை, புது வரவு பொருட்களும் ஏராளமாக இடம் பெற்றிருந்ததால், புதுச்சேரி மட்டுமின்றி, கடலுார், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை என, பல்வேறு மாவட்ட மக்கள் ஷாப்பிங் செய்ய குவிந்தனர்.
இதனால், ஐந்து நாட்கள் கண்காட்சி அமர்க்களமாக இருந்தது.'ஏசி' அரங்குகளில் நடந்த இக்கண்காட்சியில் வீட்டு உபயோகப் பொருட்கள், பல்வேறு வகையான ஆடைகள், விதவிதமான அழகு சாதனப் பொருட்கள், காலணிகள், பர்னீச்சர்கள், உணவுப் பொருட்கள், ஹெல்த் கேர் பொருட்கள், மோட்டார் சைக்கிள்கள், கார்கள் என அனைத்துதரப்பு மக்களையும் திருப்திப்படுத்தும் வகையில் தரமான பொருட்கள் சிறப்பு சலுகையில் விற்பனைக்கு குவிக்கப்பட்டிருந்ததால், விரும்பிய பொருட்களை பொதுமக்கள் நிதானமாக வாங்கியதை, சர்வதேச அளவிலான ஷாப்பிங் அனுபவத்தை தந்ததாக கூறி மகிழ்ந்தனர்.குழந்தைகளுக்கான விளையாட்டு அம்சங்கள், ஒட்டகச் சவாரி, ரயில் பயணம், பைக் ரைடு, வாட்டார் போட் என, விளையாட்டுகள் நிறைந்திருந்ததால், குட்டீஸ்கள் விளையாடி மகிழ்ந்தனர்.மக்கள் மனதார பாராட்டு:ஐந்து நாட்கள் நடந்த கண்காட்சியில் கைநிறைய பொருட்களோடு மன நிறைவு மகிழ்ச்சியோடும் பொதுமக்கள் திரும்பினர், அடுத்து, உணவு அரங்கத்திலும், நாவிற்கு சுவையூட்டும் வகை வகையான உணவு வகைகள் கிடைத்ததால், கண்காட்சிக்கு வந்தவர்கள் அளவிலான மகிழ்ச்சி அடைந்தனர்.
தங்களுக்கு முழு மன நிறைவை தினமலர் கண்காட்சி ஏற்படுத்தியதாக கண்காட்சிக்கு வந்தவர்கள் பாராட்டினார்.இப்படியாக, புதுச்சேரி, கடலுார், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மாவட்ட மக்களை, கொண்டாட்டத்திலும், குதுாகலத்திலும் ஆழ்த்திய தினமலர் ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் எக்ஸ்போ நேற்றுடன் இனிதே நிறைவு பெற்றது.கண்காட்சியை ருசி பால் நிறுவனம், சத்யா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம், கோவை லஷ்மி நிறுவனம், ஜெய் கோ நிறுவனம், ராயல் மேக்ஸ், ஹைஜினி மினரல் வாட்டர், எஸ்.மீடியா, 92.7 பிக் எப்.எம்., ஆகியவை இணைந்து வழங்கின.
நன்றி. நன்றி.. நன்றி...'தினமலர் ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் எக்ஸ்போ'வை மக்கள் சிரமமின்றி பார்வையிட பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்த புதுச்சேரி போலீஸ் துறை, தீயணைப்பு துறை மற்றும் போக்குவரத்து போலீசார் ஆகியோருக்கு தினமலர் நாளிதழ் நெஞ்சர்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறது.மேலும், முதல்வர், சபாநாயகர், முன்னாள் முதல்வர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள், கண்காட்சியை இணைந்து வழங்கி யோர், வாடிக்கையாளர்கள் விளம்பரதாரர்கள், அரங்க நிர்வாகிகள், ஒலி ஒளி அமைத்தவர்கள், கண்காட்சிக்கு உதவிய நல்ல இதயங்கள், எல்லாவற்றிற்கும் மேலான தினமலர் வாசகர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X