பள்ளி விளையாட்டு விழா :மாணவர்கள் அணிவகுப்பு

Added : ஜன 14, 2020
Share
Advertisement
 பள்ளி விளையாட்டு விழா :மாணவர்கள் அணிவகுப்பு

உடுமலை:உடுமலை, சீனிவாச மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் விளையாட்டு விழா நடந்தது.பள்ளி முன்னாள் மாணவர் ராஜரத்தினம் விழாவை துவக்கி வைத்தார். முன்னாள் மாணவர் பாலாஜி சோமசுந்தரம் முன்னிலை வகித்தார்.
மாணவர்கள் அணிவகுப்பு மரியாதை செய்தனர்.விளையாட்டுப்போட்டிகளில், மாணவர்களுக்கான தனிநபர் சப் ஜூனியர் பிரிவில் மாணவர் கிேஷார் கார்த்திக், ஜூனியர் பிரிவில் கோகுல்ஸ்ரீ, கவின்கிேஷார், சீனியர் பிரிவில் ஸ்ரீநிதின், ஆகாஷ், சூப்பர் சீனியர் பிரிவில் நரேந்திரன் சாம்பியன் கோப்பையை பெற்றனர்.

மாணவியருக்கான தனிநபர் போட்டியில் சப் ஜூனியர் பிரிவில் அகல்யா, ஜூனியர் பிரிவில் பிரியங்கா, சீனியர் பிரிவில் மதுமிதா, சூப்பர் சீனியர் பிரிவில் வேதவர்ஷினி, கிருபாஷினி, சாம்பியன் கோப்பை பெற்றனர்.மாணவர்கள், கராத்தே, சிலம்பம் மற்றும் பிரமிட் பயிற்சிகளை செய்தனர். மொத்த புள்ளிகள், வாயு அணியினர் 335 புள்ளிகள் பெற்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை பெற்றனர்.விழாவில், பள்ளி தாளாளர் விக்னேஷ்ரங்கநாதன், நிர்வாக குழு உறுப்பினர்கள், பள்ளி நிர்வாகத்தினர், ஆசிரியர்கள், பெற்றோர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X