பொது செய்தி

தமிழ்நாடு

ஊர்ப்புற நூலகம் ஒன்றியத்தில் துவக்கணும்: பொதுமக்கள் வலியுறுத்தல்

Added : ஜன 14, 2020
Advertisement

உடுமலை:குடிமங்கலம் ஒன்றியத்தில், ஊர்ப்புற நுாலகம் துவக்க வேண்டும் என்ற கோரிக்கையை, உள்ளாட்சி பிரதிநிதிகள் நிறை வேற்ற வேண்டும் என, மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.குடிமங்கலம் ஒன்றிய கிராமங்களிலுள்ள, அரசுப்பள்ளிகள் தரம் உயர்வு உட்பட காரணங்களால், ஆண்டுதோறும், படித்தவர்கள் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. மேலும், அரசு போட்டித்தேர்வில் பங்கேற்க கிராமப்புற இளைஞர்களும் ஆர்வம் காட்டுவது அதிகரித்துள்ளது.
ஆனால், இத்தேர்வுகளுக்கு தயாராக தேவையான கட்டமைப்பு வசதிகள் இல்லை.இந்த ஒன்றியத்தில், மாவட்ட நுாலக ஆணைக்குழு சார்பில், பெதப்பம்பட்டி, பூளவாடி ஆகிய இரண்டு இடங்களில் மட்டும், கிளை நுாலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நுாலகங்களுக்கு, ஒன்றியத்தின் கடைக்கோடியில் உள்ள வீதம்பட்டி, வாகத்தொழுவு, மூங்கில்தொழுவு, அனிக்கடவு, பெரியபட்டி உட்பட, 25க்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து, வந்து செல்வது மிகுந்த சிரமமானதாகும்.எனவே, குறிப்பிட்ட கிராமங்களை ஒருங்கிணைத்து, ஊர்ப்புற நுாலகங்கள் துவக்க வேண்டும் என்ற இப்பகுதி மக்களின் கோரிக்கை, பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.
தி.மு.க., ஆட்சிக்காலத்தில், கிராமங்களில், துவக்கப்பட்ட 'அண்ணா நுாலகமும்' மூடப்பட்டு, நுாலக கட்டடங்கள் பராமரிப்பின்றி பரிதாப நிலையில் உள்ளது. போட்டித்தேர்வுக்கு தயாராகும் இளைஞர்கள், இரண்டு பஸ் மாறி, உடுமலையிலுள்ள நுாலகங்களுக்கு வந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண, குடிமங்கலம் ஒன்றியத்தில், புதிதாக பொறுப்பேற்றுள்ள, உள்ளாட்சி பிரதிநிதிகளாவது, ஊர்ப்புற நுாலகம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X