பொது செய்தி

தமிழ்நாடு

கறவை மாடுகள் வாங்குவதற்கு கடன் வழங்காமல் இழுத்தடிப்பு: ஜல்லிபட்டி விவசாயிகள் வேதனை

Added : ஜன 14, 2020
Advertisement

உடுமலை:கறவை மாடுகள் வாங்குவதற்கான கடன் வழங்காமல், மத்திய கூட்டுறவு வங்கி அதிகாரிகள் இழுத்தடிப்பதால், பாதிக்கப்பட்டுள்ளதாக ஜல்லிபட்டி விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.உடுமலை ஒன்றியம், ஜல்லிபட்டியில் உள்ள பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம், ஆவின் 959, ல்,அப்பகுதியை சேர்ந்த, விவசாயிகள் உறுப்பினராக பதிவு செய்து, பால், விற்பனை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், பால் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில், கறவை மாடுகள் வாங்க, கடனுதவி வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர்.இதையடுத்து, மத்திய கூட்டுறவு வங்கி, உடுமலை கிளையில், பால் உற்பத்தியாளர்கள் சார்பில், மனு கொடுக்கப்பட்டது. கடன் வழங்க, திருப்பூர் மாவட்ட, ஆவின் நிர்வாக குழு சார்பில், மத்திய கூட்டுறவு வங்கிக்கு பரிந்துரையும் அளிக்கப்பட்டது.அதன்படி, பால் விற்பனை தொகையில், பிடித்தம் செய்து, கடனை திருப்பி செலுத்தவும், பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டு, மத்திய கூட்டுறவு வங்கி அலுவலர்களிடம் அளிக்கப்பட்டுள்ளது.இது குறித்து விவசாயிகள் கூறியதாவது: திருப்பூர் மாவட்ட, 'ஆவின்' கட்டுப்பாட்டில், ஜல்லிபட்டி பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் உள்ளது.
இங்கு, பால் கொள்முதலை அதிகரிக்க, மத்திய கூட்டுறவு வங்கியில், கறவை மாடு வாங்க கடன் உதவி கேட்டு விண்ணப்பித்தோம்.ஆனால், இதுவரை கடனுதவி வழங்காமல் இழுத்தடிக்கின்றனர். அதிகாரிகளின் இத்தகைய செயல்களால், கூட்டுறவு சங்கத்தை கைவிட்டு தனியார் பால் கொள்முதல் நிலையங்களில் உறுப்பினராவது அதிகரித்துள்ளது.எனவே, திருப்பூர் மாவட்ட நிர்வாகம், மத்திய கூட்டுறவு வங்கி உடுமலை கிளை மூலம், கடன் உதவி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை வலியுறுத்தி, அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை மனு அனுப்பி வருகிறோம். இவ்வாறு, கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X