பொது செய்தி

இந்தியா

புகையில்லா போகி விழிப்புணர்வு பேரணி 

Added : ஜன 14, 2020
Advertisement
 புகையில்லா போகி விழிப்புணர்வு  பேரணி 

புதுச்சேரி:குயவர்பாளையம் சுகாதார மற்றும் நல்வாழ்வு மையம் சார்பில் புகையில்லா போகி மற்றும் டெங்கு விழிப்புணர்வு பேரணி நடந்தது.
குயவர்பாளையம் சுகாதார மற்றும் நல்வாழ்வு மையம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட புகையில்லா போகி மற்றும் டெங்கு விழிப்புணர்வு பேரணியை மலேரியா உதவி இயக்குநர் கணேசன் துவக்கி வைத்தார். சுகாதார ஆய்வாளர் யசோதா வரவேற்றார். மருத்துவ அதிகாரி அஸ்வினி தலைமை தாங்கினார். டாக்டர்கள் அஜ்மன், உஷஸ் முன்னிலை வகித்தனர்.பேரணியில் கஸ்துாரிபாய் செவிலியர் கல்லுாரி, சைன் பாரா மெடிக்கல் கல்லுாரி மாணவ மாணவிகள் பங்கேற்று தமிழ் பாரம்பரிய ஆடை அணிந்து புகையில்லா போகி கொண்டாட விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி சென்றனர். சுகாதார ஆய்வாளர் அய்யனார், போகி தினத்தன்று பழைய டயர், ரப்பர், பிளாஸ்டிக் போன்ற பொருட்களை எரிப்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விளக்கி கூறினார்.சமூக ஆர்வலர் சரவணன் டெங்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.பேரணிக்கான ஏற்பாடுகளை சுகாதார உதவி ஆய்வாளர் தாமோதரன் வெங்கட்ராமன் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X