பொது செய்தி

இந்தியா

அனைத்து குடும்ப அட்டைக்கும் பொங்கல் பரிசு: அன்பழகன் எம்.எல்.ஏ., வலியுறுத்தல்

Added : ஜன 14, 2020
Advertisement

புதுச்சேரி:புதுச்சேரியில் பாரபட்சமின்றி அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுக்கான தொகையை வழங்க வேண்டும் என அன்பழகன் எம்.எல்.ஏ., வலியுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை:புதுச்சேரியில் தி.மு.க., துணையோடு ஆட்சி நடத்தும் காங்., அரசு தொடர்ந்து மக்கள் விரோத செயலில் ஈடுபட்டு வருகிறது. மாநில வளர்ச்சி மற்றும் மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் செயல்படுத்தாதா அரசாக உள்ளது. பொங்கல், தீபாவளி பண்டிகை காலத்தில் மக்களுக்கு துணி, சர்க்கரை, பொங்கல் உணவு பொருட்கள் கூட அனைவருக்கும் வழங்காமல் ஏமாற்றி வருகிறது.தமிழகத்தில் 2.7 கோடி குடும்ப அட்டைக்கு இலவச துணி, மாதாந்திர 20 கிலோ அரிசி, பொங்கல் பரிசாக ரூ.ஆயிரம் மற்றும் பொங்கல் பொருட்களை அ.தி.மு.க., அரசு வழங்கியது.தமிழகத்தை பின்பற்றி புதுச்சேரியிலும் ரூ.ஆயிரம் மக்களுக்கு வழங்கப்படும் என வெற்று அறிக்கை விட்ட முதல்வர் நாராயணசாமி, அதற்கான நடவடிக்கையை எடுக்கவில்லை.பொங்கல் உணவு பொருட்கள் வறுமை கோட்டிற்கு கீழுள்ளவர்களுக்கு மட்டும் வழங்கப்படும் என கடந்த ஆண்டிற்கு முன் காங்., அரசு, அரசாணை பிறப்பித்தது. சட்டசபையில் அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றபோது, அடுத்த ஆண்டில் இருந்து அனைவருக்கும் வழங்கப்படும் என, முதல்வரும், துறை அமைச்சரும் சட்டசபையில் உறுதியளித்தனர்.
அதன்படி, தற்போது மொத்தமுள்ள 3.55 லட்சம் குடும்ப அட்டைகளுக்கும் பொங்கல் பரிசு பொருட்களுக்கான ரூ.170 வழங்காமல், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள 1.91 லட்சம் குடும்பத்திற்கு மட்டும் ரூ.170 வங்கியில் செலுத்தப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணத்தையும் முழுமையாக ஏ.டி.எம் மூலம் எடுக்க முடியாது.இந்த சிறிய திட்டத்திற்கான கோப்பை கவர்னர் அனுமதிக்கு அனுப்பி, அனைவருக்கும் பொங்கல் பரிசு பொருட்கள் கிடைக்காமல் செய்துள்ளார்.எனவே, இனிமேலும் மக்களை ஏமாற்றாமல் முதல்வர் உறுதியளித்தபடி அனைவருக்கும் பொங்கல் உணவுப் பொருட்கள், ரூ.ஆயிரம் பணமும் உடனடியாக வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X