பொது செய்தி

இந்தியா

பேராசிரியர், நுாலகர், உடற்கல்வி இயக்குனர் பணிக்கு 17ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு

Added : ஜன 14, 2020
Advertisement

புதுச்சேரி:உதவி பேராசிரியர், நுாலகர், உடற்கல்வி இயக்குனர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு வரும் 17 ம்தேதி நடக்கிறது.
இது குறித்து உயர் கல்வித் துறை இயக்குனர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:புதுச்சேரி உயர் கல்வித் துறையின் கீழ் செயல்படும் சொசைட்டி கல்லுாரிகளில் காலியாக உள்ள உதவி பேராசிரியர், நுாலகர், உடற்கல்வி இயக்குனர் பணியிடங்களை நிரப்புவதற்காக விண்ணப்பங்கள் பெறப்பட்டன.இந்த விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு, அதற்கான தேர்வு செய்யப்பட்டவர்களின் விபரங்கள் www.centacpuducherry.in/job என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.பணியிடத்திற்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு வரும் 17ம் தேதி லாஸ்பேட்டையில் உள்ள உயர் கல்வித் துறை இயக்குனரகத்தில் நடக்கிறது.சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்ததும் தகுதி, முன்னுரிமை அடிப்படையில் அவர்கள் சொசைட்டி கல்லுாரிகளில் பணியமர்த்தப்படுவர். அவர்கள் 20ம் தேதி அல்லது அதற்கு முன்பாக பணியில் சேர வேண்டும்.சான்றிதழ் சரிபார்ப்புக்கு வரும்போது அசல் சான்றிதழ்களை கட்டாயம் கொண்டு வர வேண்டும்.அசல் சான்றிதழ்கள் சமர்பிக்காவிட்டால், தகுதி பட்டியலில் அடுத்து உள்ளவர்களுக்கு அந்த வாய்ப்பு அளிக்கப்படும். சென்னை நிர்வாக தீர்பாய வழக்கின் காரணமாக தமிழ் ஓ.பி.சி.,-4, பொருளியல் எஸ்.சி.,-1, சோஷியாலஜி பொது-1 இடங்கள் நிரப்பப்படவில்லை.இவ்வாறு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X