தொழில்நுட்ப ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Added : ஜன 14, 2020
Share
Advertisement
 தொழில்நுட்ப ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி:பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, பொதுப்பணித்துறை தொழில்நுட்ப ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
புதுச்சேரி பொதுப்பணித்துறை தொழில்நுட்ப ஊழியர்கள் சங்கம் சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, பொது சுகாதார கோட்ட பொறுப்பின் கீழ் இயங்கும் 10 இளநிலை பொறியாளர் அலுவலகங்கள் முன்பு கோரிக்கை விளக்க வாயிற் கூட்ட போராட்டம் நடத்த அறிவிக்கப்பட்டிருந்தது.அதன்படி நேற்று காலை குடிநீர் பிரிவு இளநிலை பொறியாளர் அலுவலகம் முன்பும், மாலை கழிவுநீர் உட்கோட்ட பிரிவு இளநிலை பொறியாளர் அலுவலம் முன்பும் வாயிற்கூட்ட போராட்டம் நடத்தப்பட்டது,.சங்க தலைவர் சரவணன் தலைமை தாங்கினார். பொதுச்செயலர் வீராசாமி முன்னிலை வகித்தார். சம்மேளன பொறுப்பாளர்கள் ஞானசேகர், மோகனகிருஷ்ணன், இளங்கோவன், சங்க ஆலோசகர்கள் அப்துல் அஜிஸ், ஏகாம்பரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.துணைத் தலைவர் பெருமாள் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X