பொது செய்தி

இந்தியா

49 ஆயிரம் மனுக்களுக்கு தீர்வு கவர்னர் கிரண் பேடி தகவல்

Added : ஜன 14, 2020
Advertisement

புதுச்சேரி:புதுச்சேரி கவர்னர் மாளிகையில் 49 ஆயிரம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது என கவர்னர் கிரண்பேடி தெரிவித்துள் ளார்.
இது குறித்து அவர் சமூக வலைதளத்தில் விடுத் துள்ள பதிவு: புதுச்சேரி நிர்வாகத்தில் பொதுமக்கள் குறைகளை சொல்லும் முறையை நவீனமாக்கி உள்ளாம். கவர்னர் மாளிகை அதிகாரி பாஸ்கரன் அனைத்து துறை செயலர்களுடன் தொடர்பில் இருக்கிறார்.இதனால், புகார்களின் அடிப்படையில் வார இறுதி நாட்களில் ஆய்வுக்கு செல்ல உதவுகிறது.கட்டுப்பாட்டு அறை எண்ணுடன், 9500560001, 9443460717 ஆகிய வாட்ஸ் ஆப் எண்களிலும் பொதுமக்களின் புகார்கள் பெறப்படுகின்றன. இதனை அதிகாரி பாஸ்கரன், பொறுப்புடன் பதிவு செய்து, துறை ரீதியாக விசாரணைக்கு அனுப்பி வைக்கிறார். அரசின் கொள்கை முடிவு தொடர்பாக புகார்கள் தலைமை செயலருக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. கவர்னர் மாளிகையில் நடக்கும் ஓபன் ஹவுஸ் நேரத்தில் அதிகாரிகளிடம் புகார்தாரர்கள் நேரில் விளக்கம் பெறுகின்றனர்.கவர்னர் மாளிக்கைக்கு வரும் சிவில் தொடர்பான புகார்கள் உடனடியாக மக்கள் நீதி மன்றத்திற்கு அனுப்பி வைக்கப்படுகி றது. அவ்வாறு கடந்தாண்டு 128 புகார்கள் மக்கள் நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நாளிதழ்களில் வரும் செய்திகள் அடிப்படையில் புகார்கள் விசாரிக்கப்படுகிறது. அவ்வாறு கடந்தாண்டு 12,505 புகார்கள் பெறப்பட்டு தீர்க்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் துவக்கப்பட்டது முதல் 49 ஆயிரத்து 505 புகார்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.புதுச்சேரி மக்கள் தங்களின் குறைகளை எந்த நேரத்திலும் கவர்னர் மாளிகைக்கு தெரிவிக்கலாம். புகார்களின் அடிப்படையில் விசாரிக்கப்பட்டு தீர்வு காணப்படும். சில சிக்கலான விஷயங்களுக்கு கொள்கை முடிவுகள், நிதி ஆதாரம் தேவைப்படுகிறது. இதிலும் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.ஊழலற்ற நிர்வாகத்தை நிதி பாழ் ஆகாத நிர்வாகத்தை மக்களுக்கு வழங்க முனைப்புடன் செயல்படுகிறோம். இதற்காகவே, புதுச்சேரியில் சி.பி.ஐ. அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மக்கள் இந்த சேவையையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.இவ்வாறு சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X