நடவடிக்கையை சந்திக்க தயார்: தனவேலு

Added : ஜன 14, 2020
Advertisement

புதுச்சேரி:கட்சிக்கு எதிராக செயல் படுவதாக என் மீது நடவடிக்கை எடுத்தால் அதையும் சந்திக்க தயராக உள்ளேன் என தனவேலு எம்.எல்.ஏ., கூறினார்.
காங்., கட்சியை சேர்ந்த பாகூர் எம்.எல்.ஏ. தனவேலு, முதல்வர் நாராயணசாமி தலைமையிலான அமைச்சரவை மீது அதிருப்தியில் உள்ளார். அவர் நேற்று மாலை ராஜ்நிவாசில், கவர்னர் கிரண்பேடியை சந்தித்து பேசினார்.பின்னர் அவர் கவர்னருடனான சந்திப்பு குறித்து தனவேலு எம்.எல்.ஏ., கூறியதாவது:புதுச்சேரி மாநிலத்தின் நலனுக்காக இந்த சந்திப்பு நடந்தது. எனது தொகுதியில் ரூ.30 கோடி அளவில் பல்வேறு திட்டங்கள் நடந்து வருகிறது. ஆனால் முதல்வர், அமைச்சர்கள் தலைமையில் நடந்த கூட்டத்தில் எனது தொகுதியில் திட்டங்கள் மறுக்கப்படும் என்று பேசப்பட்டுள்ளது. எனவே, எனது தொகுதியில் எந்த நலத்திட்டங்களும் தடைபடக்கூடாது என்று கவர்னரிடம் தெரிவித்துள்ளேன். அவரும் கண்காணிப்பதாக உறுதி அளித்துள்ளார்.வரும் சட்டசபை தேர்தலில் நான் எம்.எல்.ஏ., வாக வரக்கூடாது; எனது அரசியல் வாழ்க்கையை அழித்துவிட நினைக்கின்றனர். அது முடியாது. மக்கள் நினைத்தால் தான் என்னை அழிக்க முடியும்.பல்வேறு திட்டங்களுக்கு கவர்னர் முட்டுக்கட்டை போடுவதாக கூறு கின்றனர். அதை நான் ஏற்கவில்லை. ஒரு அரசு துறையில் 500 ரூபாயில் புடவை வாங்க திட்டமிடுகின்றனர். ஆனால் 200 ரூபாயிற்கு கொள்முதல் செய்கின்றனர். மீதமுள்ள 300 ரூபாய்பிரித்துக்கொள்ளப்படுகிறது. இதுமாதிரி ஊழல்கள் கவர்னரின் கவனத்திற்கு சென்றுவிடுகிறது. அப்படி இருக்கும்போது கோப்பில் யார் தான் கையெழுத்து போடுவார்கள். இதனால் தான் கவர்னர் பணமாகவே நேரடியாக கொடுத்து விடுங்கள் என்கிறார். ஆனால் கவர்னர் தடுப்பதாக, முதல்வர் மாற்றி பேசுகிறார். இதில் கவர்னர் எந்த விதத்தில் தடுக்கிறார்.கடந்த முறை 20 ஊழல்கள் நடந்துள்ளது என தெரிவித்திருந்தேன். ஆனால் பல துறைகளில் ஊழல் தலைவிரித்தாடுகிறது. ஊழல் எண்ணிக்கை இன்னும் அதிகமாகிக் கொண்டிருக்கிறது. பலர் என்னிடம் ஊழல் புகார்களை கொடுத்து வருகின்றனர். ஆவணங்களை திரட்டி வருகிறேன்.முதல்வர், மத்திய அமைச்சரவையில் சி.பி.ஐ., உள்பட பல பொறுப்புகளை பார்த்தவர். அதிகாரி கள் அவரிடம் இன்னும் நெருக்கமாக உள்ளனர். கடந்த காலங்களில் சி.பி.ஐ., போன புகார்கள் அனைத்தும் அங்கேயே கடலில் கரைப்பதை போன்று கரைக்கப்பட்டது. தற்போது கவர்னர் இருக்கிறார். எனவே சி.பி.ஐ., மீது நம்பிக்கை இருக்கிறது.பொங்கல் முடிந்ததும் டில்லி சென்று கட்சி மேலிடத்தில் புகார் தெரிவிப்பேன். இதற்காக 'அப்பாயின்ட்மென்ட்' கேட்டுள்ளேன். காங்., கட்சி புனிதமான கட்சி. நான் காங்., கட்சிக்காரன் தான். அதில் இருந்து வெளியேறவில்லை. கட்சிக்கு எதிராக செயல்படுவதாக என் மீது நடவடிக்கை எடுத்தால் அதையும் சந்திக்க தயராக உள்ளேன்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X