புதுச்சேரி:ஒதியம்பட்டு குளூனி சி.பி.எஸ்.இ., பள்ளியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
பொங்கல் விழாவில் பங்கேற்க, கல்வித்துறை அனுமதியின்பேரில் திருவண்டார்கோவில் அரசு தொடக்கப் பள்ளி, வில்லியனுார் அரசு நடுநிலைப்பள்ளி, அரியூர் அரசு தொடக்கப்பள்ளி மாணவியர்கள் மற்றும் ஆசிரியர்கள், ஒதியம்பட்டு குளூனி சி.பி.எஸ்.சி., பள்ளிக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களை குளூனி பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் வரவேற்றனர்.பள்ளி நிர்வாகி எமிலியனா தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் ஜெய்ஸ் ஜான் வரவேற்றார். முதன்மை விருந்தினர்களாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரி மீனாட்சி சுந்தரம், வில்லியனுார் மண்டல பள்ளி துணை ஆய்வாளர் ராபர்ட் கென்னடி, வட்டார வளமைய கல்வியாளர் நான்சி அலெக்ஸ் விழாவை துவக்கி வைத்தனர். அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.பொங்கல் வைத்து அனைவருக்கும் வழங்கப்பட்டது. பொங்கல் திருநாளின் சிறப்புகள், உழவர்களின் பெருமைகளை வெளிப்படுத்தும் வகையில் மாணவியரின் வில்லுப்பாட்டு, கரகாட்டம், காவடியாட்டம், புலியாட்டம் போன்ற பாரம்பரிய நடனங்கள் இடம் பெற்றன.அதனை தொடர்ந்து அரசுப்பள்ளி மாணவியர்ளும், குளூனி பள்ளி மாணவியர்களும் குழுக்களாக பிரிக்கப்பட்டு பாரம்பரிய விளையாட்டுகளை விளையாடினர். பின்பு அரசுப்பள்ளி மாணவியருக்கு வாழ்த்து அட்டைகள், பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.விழாவில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவியர்கள் ஒன்று கூடி தங்களின் அன்பை வெளிப்படுத்தனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE