இந்தியா

உற்சாகம்! கிராமங்களில் சம்பா பருவ அறுவடை தீவிரம்...வயல்களை நோக்கி இயந்திரங்கள் படையெடுப்பு

Added : ஜன 14, 2020
Advertisement
 உற்சாகம்!  கிராமங்களில் சம்பா பருவ அறுவடை தீவிரம்...வயல்களை நோக்கி இயந்திரங்கள் படையெடுப்பு

புதுச்சேரி:அறுவடை திருநாளான பொங்கலை கொண்டாடும் வகையில், கிராமங்களில் சம்பா பருவ அறுவடை தீவிரமாக நடந்து வருகிறது.
புதுச்சேரியில் நெல், கரும்பு, மணிலா, கம்பு உள்ளிட்ட பல்வேறு பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. அதுபோல, தோட்டக் கலை பயிர்களும், காய்கறிகளும் பயிர் செய்யப்படுகின்றன. இருந்தபோதும், நெல் சாகுபடியே முதலிடத்தில் உள்ளது. புதுச்சேரி பகுதியில் 10 ஆயிரம் எக்டேர் பரப்பளவில் நெல் சாகுபடி நடக்கிறது.புதுச்சேரியின் நெற்களஞ்சியம் என போற்றப்படும் பாகூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்கள், ஏம்பலம், வில்லியனுார் என பெரும்பாலான பகுதிகளில் தாளடி, சொர்ணாவாரி, சம்பா என மூன்று போகம் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. 50 ஆயிரம் மெட்ரிக் டன் அளவிற்கு அரிசி உற்பத்தி செய்யப்படுகிறது.தாளடி என்பது பிப்ரவரி மாதம் நாற்று விட்டு, ஏப்ரலில் அறுவடை செய்யப்படும். இந்த சீசனில் 90 நாட்களில் வளர்ந்து அறுவடைக்கு தயாராகும் நெல் ரகங்களை விவசாயிகள் சாகுபடி செய்வர்.இதன் தொடர்ச்சியாக, சொர்ணாவாரி பருவம் ஆரம்பிக்கும். ஏப்ரல், மே மாதங்களில் அக்னி வெயிலின் கடுமை குறைந்தவுடன் நாற்று விடுவது வழக்கம். இந்த சீசனிலும் மூன்று மாதங்களில் அறுவடைக்கு தயாராகும் ரகங்களே நடப்படும். ஜூலை மாதத்தில் நடக்கும் அறுவடையை தொடர்ந்து சொர்ணாவாரி பருவம் முடிவுக்கு வரும்.மூன்றாவது பருவமாக சம்பா பருவம் ஆகஸ்ட் மாதத்தில் ஆரம்பிக்கும். தாளடி, சொர்ணாவாரியைவிட சம்பா பருவம் பல மாதங்கள் நீடிக்கும். இந்த பருவத்தில் 5 மாதங்களையும் தாண்டி வளரக்கூடிய நெல் ரகங்கள் சாகுபடி செய்யப்படும்.சம்பா பருவ சாகுபடிக்கு ஆடி 18ம் தேதியன்று நாற்று விடுவது பாரம்பரிய வழக்கமாக பின்பற்றப்பட்டு வருகிறது.
இந்த பயிர்கள் ஜனவரி அறுவடைக்கு தயாராகி விடும். புதுச்சேரி பகுதியில் வெள்ளை பொன்னி, பொன்மணி, பிபிடி 5204 மற்றும் லேட் சம்பா பயிராக ஏடிடி 37, ஏடிடி 39 உள்ளிட்ட ரகங்களை விவசாயிகள் பயிரிட்டுள்ளனர்.சாகுபடி செய்யப்பட்ட நெல் பயிர்கள் நன்றாக வளர்ந்து, அறுவடைக்கு தயாராகி விட்டன. அறுவடை செய்யப்பட்ட நெல்லை, பொங்கல் பண்டிகையன்று, புதிய பானையில் இட்டு பொங்கல் வைத்து சூரியனுக்கு படையலிடுவது வழக்கம்.இதுபோன்ற சூழ்நிலையில், புதுச்சேரி முழுவதும் அறுவடை துவங்கி நடந்து வருகிறது.
தற்போது, அறுவடைக்கு இயந்திரங்களே முழுவதுமாக பயன்படுத்தப்படுகிறது. தமிழகத்திலும் அறுவடை நடந்து வருவதால் இயந்திரங்கள் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, வாடகையும் சற்று உயர்ந்துள்ளது.இருந்தபோதும், நெல் அறுவடையில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளதால், கிராமங்கள் களை கட்டி உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X