பொது செய்தி

இந்தியா

சிவப்பு ரேஷன் கார்டுக்கு பொங்கல் பரிசு மஞ்சள் கார்டுகளுக்கு கிடையாது

Added : ஜன 14, 2020
Advertisement

புதுச்சேரி:சிவப்பு ரேஷன் கார்டுகளுக்கு மட்டும் பொங்கல் பரிசாகஇன்று முதல் வங்கி கணக்கில் 170 ரூபாய் செலுத்தப்பட உள்ளது.
தமிழ்நாட்டில்பொங்கலுக்கு ரேஷன் கார்டுக்கு 1000 ரூபாய் பணம், 6 வகையான பரிசு பொருட்கள் வழங்கப்படடது. இதே போல் புதுச்சேரியிலும்1000 ரூபாய் பணம், 6 வகையான பரிசு பொருட்கள் வழங்கப்படும் என்று முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார். இது தொடர்பாக கோப்பிற்கு ஒப்புதல் கிடைக்கவில்லை.இதனால் பொங்கல் பொருட்களுக்கான 170 ரூபாய், 2 மாத அரிசி, இலவச துணி ஆகியவற்றிற்கான பணத்தை இணைத்து வழங்க முடிவு செய்யப்பட்டது. இதிலும்சிவப்பு ரேஷன்கார்டுதார்களுக்கு மட்டும் தலா 170 ரூபாய் பொங்கல் பரிசு வழங்க அனுமதி தற்போதுகிடைத்துள்ளது. இந்த பணமும் இன்று 14ம் தேதி முதல்வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.கடந்த காலங்களில் தீபாவளி, பொங்கலுக்கு அரசின் பரிசு அனைத்து ரேஷன்கார்டுகளுக்கும் வழங்கப்படும். கடந்தாண்டு சிவப்பு ரேஷன்கார்டுகளுக்கு மட்டும் 135 ரூபாய் அவர்களது வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டது. இந்தாண்டாவதுமஞ்சள் ரேஷன் கார்டுகளுக்கும் பொங்கல் பரிசுவழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.ஆனால் இந்த ஆண்டும் மஞ்சள் ரேஷன்கார்டுகளுக்கு பொங்கல் பரிசுதடைப்பட்டுள்ளது.இதற்கிடையில் மஞ்சள் கார்டுகளுக்கும் பொங்கல் பரிசு கிடைக்க அமைச்சர் கந்தசாமி நேற்று அதிகாரிகளுடன் சட்டசபையில் ஆலோசனை நடத்தினர். இதில் நிதித்துறை செயலர்சுர்பீர்சிங், கூட்டுறவுத் துறை செயலர் அசோக்குமார், சமூக நலத்துறை செயலர் ஆலிஸ்வாஸ், குடிமைப் பொருள் வழங்கல் துறை இயக்குனர் வல்லவன், சமூக நலத்துறை இயக்குனர் சாரங்கபாணி, மகளிர் குழந்தைகள்மேம்பாட்டுத் துறை இயக்குனர் யஷ்வந்தையா, ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குனர் ரகுநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இருப்பினும் மஞ்சள் ரேஷன்கார்டுகளுக்கு பொங்கல் பரிசு சம்பந்தமாக இறுதி முடிவுக்கு வரவில்லை.மாநிலத்தில் 1.70 லட்சம் சிவப்பு ரேஷன் கார்டுகளுக்கு பொங்கல் பரிசு வழங்குவதன் மூலம் 2.89 கோடி ரூபாய் செலவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X