பொது செய்தி

இந்தியா

தனவேலு எம்.எல்.ஏ., திடீர் சந்திப்பு ஏன்? கவர்னர் மாளிகை 'பளீச்'

Added : ஜன 14, 2020
Advertisement
 தனவேலு எம்.எல்.ஏ., திடீர் சந்திப்பு ஏன்?  கவர்னர் மாளிகை 'பளீச்'

புதுச்சேரி:தனவேலு எம்.எல்.ஏ., கவர்னரை சந்தித்து பேசியது என்ன என்று கவர்னர் மாளிகை தெரிவித்துள்ளது.
கவர்னர் கிரண்பேடி ஆய்வுக்கு செல்லும்போது அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் செல்லக்கூடாது என்று ஆளும் கட்சி முடிவெடுத்து இருந்தது. இதன்படி பாகூர் சென்ற கவர்னர் கிரண்பேடியை தனவேலு எம்.எல்.ஏ., தொகுதி மக்களுடன் சேர்ந்து எதிர்ப்பு தெரிவித்தார். அதன் பிறகு பல முறை பாகூர் தொகுதியில் கவர்னர் கிரண்பேடி ஆய்வுக்கு சென்றபோதும் ஒருமுறை கூட அவர் கலந்து கொள்ளவில்லை.இந்நிலையில் தனவேலு எம்.எல்.ஏ., நேற்று ராஜ்நிவாஸ் தேடி சென்று கவர்னர் கிரண்பேடியை சந்தித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.இது தொடர்பாக கவர்னர் மாளிகை விடுத்துள்ள செய்திக்குறிப்பு:தனவேலு எம்.எல்.ஏ., கவர்னரை சந்தித்து பேசினார்.
முதல்வரும், அவரது மகனும் நில பரிவர்த்தனையில்செய்த ஊழல் குறித்த ஆதாரங்களை கொடுக்க விரும்புவதாக கவர்னரிடம் தெரிவித்தார்.அப்போது, புதுச்சேரியில் சி.பி.ஐ., அலுவலகம் உள்ளது. எனவே உங்கள் புகாரை அங்கு அணுகி தெரிவிக்கலாம் என கவர்னர் அறிவுறுத்தினார். அவர் பொங்கல் கழித்து மீண்டும் வந்து பார்ப்பதாகவும், அப்போது ஆதாரங்களை காண்பிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.இவ்வாறு செய்திக்குறிப் பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X