பொது செய்தி

இந்தியா

நமது கலாசாரம், பண்பாட்டை மாணவர்களிடம் வளர்க்க வேண்டும்: கல்வி அமைச்சர் கமலக்கண்ணன் பேச்சு

Added : ஜன 14, 2020
Advertisement
 நமது கலாசாரம், பண்பாட்டை மாணவர்களிடம் வளர்க்க வேண்டும்: கல்வி அமைச்சர் கமலக்கண்ணன் பேச்சு

புதுச்சேரி:பள்ளி மாணவர்கள் மத்தியில் நமது கலாசாரம், பண்பாடு வளர பொங்கல் விழா போன்ற நிகழ்ச்சிகள் நடத்துவது பயனுள்ளதாக அமையும் என, அமைச்சர் கமலக்கண்ணன் பேசினார்.
புதுச்சேரி புராணசிங்குபாளையம் பாவேந்தர் பாரதிதாசன் அரசு மேல்நிலைப் பள்ளியில், முன்னாள் மாணவர்கள் ஆசிரியர்கள் சந்திப்பு, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரம் வழங்குதல் மற்றும் பொங்கல் விழா ஆகிய முப்பெரும் விழா நடந்தது.25 ஆண்டுகளுக்கு முன்பு பள்ளியில் படித்த மாணவர்கள் இணைந்து நடத்திய விழா பள்ளி வளாகத்தில் பொங்கல் வைத்து தொடங்கப்பட்டது. பள்ளி துணை முதல்வர் பூபதி வரவேற்றார். செல்வம் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் யுவராஜ், அன்புமணி முன்னிலை வகித்தனர்.கல்வித்துறை இயக்குனர் ருத்ரகவுடு முன்னாள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை வாழ்த்தி பேசினார். கவ்லித்துறை அமைச்சர் கமலக்கண்ணன் வெள்ளி விழா மலரை வெளியிட்டு, பள்ளிக்கு வழங்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் அமைப்பைத் தொடங்கி வைத்து பேசுகையில், 'பாரம்பரியமான கிராமப்புற அரசுப் பள்ளியில், முன்னாள் மாணவர்களால் இது போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வரவேற்கத்தக்கது. மேலும், நமது கலாசாரம், பண்பாட்டை தற்போதைய மாணவர்களிடையே வளர்க்க இந்த நிகழ்ச்சி வழிகாட்டும்' என்றார். விழாவில் முன்னாள் ஆசிரியர்கள் பூரணி, ரத்தினவேலு, குமார், ராமையன், பசுவலிங்கம், மீனாட்சிசுந்தரம், ஜெயபால், ஸ்ரீதரன் மற்றும் தற்போதுள்ள ஆசிரியர்கள் கவுரவிக்கப்பட்டனர். தொடர்ந்து மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடந்தது.நிகழ்ச்சி ஏற்பாடுகளை முன்னாள் மாணவர்கள் செய்திருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X