பொது செய்தி

தமிழ்நாடு

மலைவாழ் மக்களுக்கு விற்பனை சந்தை திறப்பு

Added : ஜன 14, 2020
Advertisement

மேட்டுப்பாளையம்:கோப்பனாரி பகுதிகளில் உள்ள, மலைவாழ் கிராம மக்களுக்கு, நபார்டு வங்கி மற்றும் தனியார் பொதுநல அமைப்புகள் சார்பில், விளைபொருட்கள் விற்பனை சந்தை திறக்கப்பட்டுள்ளது.கோவை மாவட்டம், காரமடை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட தோலம்பாளையம் கிராமத்தில், கோப்பனாரி சுற்றுப் பகுதிகளில், 40க்கும் மேற்பட்ட மலைவாழ் கிராமங்கள் உள்ளன.இங்கு காய்கறி, சிறுதானியம், பழங்கள் உள்ளிட்டவற்றை பயிரிடுகின்றனர். அவற்றை, காரமடை, புளியம்பட்டி மற்றும் கேரள மாநிலம் கோட்டத்துறை ஆகிய பகுதிகளுக்கு வாகனங்களில் எடுத்துச் சென்று, விற்பனை செய்கின்றனர். இதனால், மலைவாழ் மக்கள், பல்வேறு சிரமத்திற்கு ஆளாவதோடு, விலை பொருட்களுக்கு சரியான விலை கிடைக்காமல் தவிக்கின்றனர்.நபார்டு வங்கி, என்.எம்.சி.டி., சேவை நிறுவனம், பன்னாட்டு லயன்ஸ் கிளப் ஆகியவை இணைந்து, கோப்பனாரி கிராமத்தில், மலைவாழ் மக்கள் தங்களது விளைபொருட்களை விற்பனை செய்ய, 'கிராம சந்தை'யை திறந்துள்ளன.கோவை மண்டல முதன்மை வனப்பாதுகாவலர் தெபசிங் ஜானா தலைமை வகித்து கூறுகையில், ''கோப்பனாரி சுற்றுப் பகுதியில், 40க்கும் மேற்பட்ட மலைவாழ் கிராமங்கள் உள்ளன. இப்பகுதியில் புதிதாக திறக்கப்பட்டுள்ள சந்தையால், மலைவாழ் மக்கள் பெரிதும் பயன் பெறுவர்,'' என்றார். நேட்டிங் மெடிக்கர் அறக்கட்டளை அறங்காவலர் சங்கரநாராயணன் வரவேற்றார். லயன்ஸ் கிளப் தலைவர் வெங்கடகிருஷ்ணன் நன்றி கூறினார்.நபார்டு வங்கியின் மாவட்ட அபிவிருத்தி மேலாளர் இசக்கிமுத்து, கோவை மாவட்ட லயன்ஸ் கவர்னர் கர்ணபூபதி, உறுப்பினர்கள் ராஜகோபால், கமலக்கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். விழாவில், 500க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்களுக்கு, பொங்கல் விழாவை முன்னிட்டு புத்தாடைகள் வழங்கப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X