பிலிப்பைன்ஸ் நாட்டை பதற வைத்த'டால்'எரிமலை

Added : ஜன 14, 2020 | கருத்துகள் (2)
Advertisement
பிலிப்பைன்ஸ் நாட்டை பதற வைத்த'டால்'எரிமலை

மணிலா: பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள 24 எரிமலைகளில்' டால்' எரிமலை தான் இரண்டாவது மிகப் பெரியது . தலைநகர் மணிலாவின் தெற்கு பகுதியில் உள்ள இந்த எரிமலை மிகப்பெரிய ஏரிக்கு நடுவே உள்ளது.ஏற்கனவே இந்த எரிமலை வெடித்து சிதறியதில் பல்லாயிரக் கணக்கானோர் பலியாகினர்.

இந்நிலையில், மீண்டும் வெடித்து சிதறியது. அப்போது 1 கி.மீ உயரத்திற்கு மேல் சாம்பல் புகை வெளியேறி வருகிறது.இதனால் அப்பகுதியே புகை மண்டலமாக காட்சி அளிக்கிறது. எரிமலை வெடித்ததையடுத்து மலையை சுற்றியுள்ள பகுதியில் வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர். எரிமலை வெடித்து சிதறி புகையை வெளியேற்றுவதை சிலர் மொபைலில் படம் பிடித்தனர்.





இது தொடர்பாக வல்லுனர்கள், டால் எரிமலை வெடிப்பால் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது. என எச்சரிக்கை விடுத்துள்ளனர். எரிமலை வெடிப்பால் அடுத்த அறிவிப்பு வெளியாகும் வரை மணிலா விமான ஓடுதளம் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. 170 விமானங்கள் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அந்தப் பகுதிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
blocked user - blocked,மயோட்
14-ஜன-202007:23:47 IST Report Abuse
blocked user வெள்ளம், புயல், எரிமலை என்று எல்லாம் ஒன்று சேர்ந்து இந்த நாட்டை அடியோ அடி என்று புரட்டிப்போடுகிறது. இயற்கையின் சீற்றம் குறைய பிரார்த்தனைகள்.
Rate this:
Share this comment
Cancel
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
14-ஜன-202006:15:32 IST Report Abuse
 nicolethomson நானும் இந்த வீடியோவை பார்த்தேன் மின்னல் போன்று இதன் இடையில் பளிச் பளிச் என தெரிவது என்ன? அது எப்படி ஆகிறது?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X