பொது செய்தி

தமிழ்நாடு

அரசு கல்லுாரியில் சமத்துவ பொங்கல்

Added : ஜன 14, 2020
Advertisement
 அரசு கல்லுாரியில் சமத்துவ பொங்கல்

மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையம் மாதேஸ்வரன் மலை அருகேயுள்ள, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.மேட்டுப்பாளையம் அரசு கலை அறிவியல் கல்லுாரியில், 850க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். பொங்கல் விழாவை முன்னிட்டு, ஏழு துறைகள் சார்பில், தனித்தனியாக மாணவர்கள் சமத்துவப் பொங்கல் வைத்தனர். விழாவுக்கு மேட்டுப்பாளையம் எம்.எல்.ஏ., சின்னராஜ் தலைமை வகித்தார். கல்லுாரி முதல்வர் சுவர்ணலதா ஜோசப் வரவேற்றார். கல்லுாரி பேராசிரியர்கள் சுகுமாரன், சுப்பிரமணி, பாண்டியராஜன், தையல்நாயகி, அபிராமி, சந்திரசேகர், பபிதா மற்றும் உதவி பேராசிரியர்கள், அலுவலர்கள் மாணவ, மாணவியர் பங்கேற்றனர். அனைவருக்கும் இனிப்பு பொங்கல் வழங்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X