இளம்பெண் கழுத்தறுப்பு: முதலியார்பேட்டையில் பரபரப்பு

Added : ஜன 14, 2020
Advertisement

புதுச்சேரி:பட்டப்பகலில் வீடு புகுந்து இளம்பெண்ணின் கழுத்தை அறுத்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
முதலியார்பேட்டை, விஜலட்சுமி நகரை சேர்ந்தவர் ராஜவேலு. இவரது மனைவி தமிழரசி 33; இவர்களுக்கு 8 வயதில் ஒரு மகன் உள்ளார். குடிப்பழக்கத்திற்கு அடிமையான ராஜவேலு, முத்தியால்பேட்டையில் உள்ள ஒரு மறுவாழ்வு மையத்தில் சேர்க்கப்பட்டு சிகிச்கை பெற்று வருகிறார்.விஜயலட்சுமி, தனது மகனுடன் வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று மதியம் அவரது வீட்டிற்குள் புகுந்த நபர், தான் வைத்திருந்த கத்தியால், விஜயலட்சுமியின் கழுத்தை அறுத்தார்.விஜயலட்சுமியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்ததும், மர்ம நபர் தப்பி ஓடிவிட்டார். உடன் அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப் இன்ஸ்பெக்டர் தமிழரசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கழுத்தில் காயத்துடன் கிடந்த விஜயலட்சுமியை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.இதுகுறித்த புகாரின்பேரில் முதலியார்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து, விஜயலட்சுமி கழுத்தை அறுத்த மர்ம நபர் யார், எதற்காக அறுத்தார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X