பொது செய்தி

தமிழ்நாடு

நாட்டுக்காக வாழ வேண்டும்! மாணவர்களுக்கு அறிவுரை

Added : ஜன 14, 2020
Advertisement

சூலுார்:சூலுார் அடுத்த முத்துக்கவுண்டன் புதுார், அரசு நடுநிலைப் பள்ளியில் சுவாமி விவேகானந்தர் இளைஞர் சக்தி இயக்கம் சார்பில், விவேகானந்தர் ஜெயந்தி விழா நடந்தது.பள்ளித் தலைமை ஆசிரியை உமாதேவி வரவேற்றார். இயக்கத் தலைவர் சம்பத்குமார் தலைமை வகித்தார். சுவாமிஜி குறித்து பேச்சு, பாட்டு, கவிதை, மற்றும் ஓவியப் போட்டிகளில் மாணவ, மாணவியர் ஆர்வத்துடன் பங்கேற்றனர். மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி, வக்கீல் ராஜமாணிக்கம் பேசுகையில், ''நமது நாட்டை உயர்த்திட விவேகானந்தர் அயராது பாடுபட்டார். உலக நாடுகளில் நமது நாட்டின் பாரம்பரியம், கலாசாரத்தை பிரசாரம் செய்தார். நம் நாட்டு மக்களிடையே தேச பக்தியை வளரச் செய்தார். நாட்டுக்காக வாழ்வது மேலானது என, இளைஞர்களிடையே எழுச்சி ஊட்டினார். அவர் வழியைப் பின்பற்றி நாம் பயணிக்க வேண்டும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X