நள்ளிரவில் தீ விபத்து: கடைகள் எரிந்து நாசம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நள்ளிரவில் தீ விபத்து: கடைகள் எரிந்து நாசம்

Added : ஜன 14, 2020
 நள்ளிரவில் தீ விபத்து: கடைகள் எரிந்து நாசம்

அன்னுார்:அன்னுாரில் நள்ளிரவில் ஏற்பட்ட தீ விபத்தில் காஸ் சிலிண்டர் வெடித்து கடைகள் எரிந்து நாசமடைந்தன.அன்னுார், கோவை ரோட்டில், ஒன்றிய அலுவலகம் அருகே, செல்லனுாரை சேர்ந்த பழனிச்சாமி என்பவர் டீக்கடை மற்றும் மளிகை கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் இரவு, 10:00 மணிக்கு கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். நள்ளிரவு 12:00 மணிக்கு கடையின் உள்ளே தீ பிடித்ததை பார்த்த சிலர் தீயணைப்புத் துறைக்கும், உரிமையாளருக்கும் தகவல் தெரிவித்தனர்.
தீ விபத்தில் கடைக்குள் வைக்கப்பட்டிருந்த, ஐந்து காஸ் சிலிண்டர்களில், இரண்டு சிலிண்டர்கள் வெடித்தன. இதில் டீக்கடை மற்றும் மளிகை கடைக்குள் இருந்த இரண்டு பிரிட்ஜ்கள், இரண்டு கிரைண்டர்கள், அலமாரிகள், உள்ளே வைத்திருந்த 71 ஆயிரம் ரூபாய் ரொக்கம், அரிசி, மளிகை பொருட்கள், காய்கறிகள் எரிந்து நாசமானது.தீயணைப்பு துறை அலுவலர் பசும்பொன் தலைமையிலான வீரர்கள், இரண்டரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். அன்னுார் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X