பொது செய்தி

தமிழ்நாடு

சிறுமுகையில் மென்பட்டு விற்பனை அமோகம்

Added : ஜன 14, 2020
Advertisement
 சிறுமுகையில் மென்பட்டு விற்பனை அமோகம்

மேட்டுப்பாளையம்:சிறுமுகையில் தயாரிக்கப்படும் மென்பட்டு சேலைகள், பெண்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளன.கோவை மாவட்டம் சிறுமுகையில் கடந்த, 15 ஆண்டுகளுக்கு முன், நான்கு பட்டு ஜவுளி கடைகள் மட்டும் இருந்தன. சிறுமுகை சுற்றுவட்டார பகுதிகளில் நெய்யப்படும் சேலைகள், இந்த கடைகளில் விற்பனை செய்யப்பட்டன.
இந்தத் தொழிலில் பெரிய அளவில் முன்னேற்றம் இல்லாமல் இருந்தது.இந்நிலையில், மென்பட்டு சேலைகள் என்ற ரகத்தை அறிமுகம் செய்து, அதில் பல்வேறு 'டிசைன்'களை அறிமுகம் செய்யத் துவங்கினர். மேலும், விசேஷ நாட்களில் மட்டுமே பட்டுச் சேலைகளை பயன்படுத்த முடியும் என்ற நிலையை, இந்த மென்பட்டு ரக சேலைகள் மாற்றின. இதனால், மென்பட்டுக்கு பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
விசேஷம், விழாக்களுக்கு மட்டுமின்றி பலரும் அலுவலகங்களுக்கும் அணிந்து செல்ல பயன்படுத்தியதால், பெண்கள் அதிகம் விரும்பி வாங்கத் துவங்கினர். இதனால், சிறுமுகையில் மென்பட்டு சேலைகளின் விற்பனை கூடியது. தற்போது, 60க்கும் மேற்பட்ட மென்பட்டு விற்பனைக் கடைகள் சிறுமுகையில் உள்ளன.
இதுகுறித்து, பட்டு ஜவுளிக் கடை உரிமையாளர்கள் கூறியதாவது:உற்பத்தி செய்யும் இடத்திலேயே விற்பனை செய்யப்படுவதால், தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும், அதிகப்படியானோர் சிறுமுகை வந்து மென்பட்டு சேலைகளை வாங்கி செல்கின்றனர். அதனால், சேலைகள் இருப்பு வைப்பதில்லை. புதிதாக நெய்த சேலைகளே கடைகளில் விற்கப்படுகின்றன. இதனால், அனைவரும் சேலைகளை விரும்பி வாங்கிச் செல்கின்றனர். குறிப்பாக, முகூர்த்த மாதங்களில் விற்பனை அதிகளவில் இருக்கும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X