பொது செய்தி

தமிழ்நாடு

செழிக்கட்டும் விவசாயம்! அன்னூர் மக்களின் 60 ஆண்டு கனவு நனவாகிறது

Added : ஜன 14, 2020
Advertisement
 செழிக்கட்டும் விவசாயம்! அன்னூர் மக்களின் 60 ஆண்டு கனவு நனவாகிறது

அன்னுார்:அத்திக்கடவு - அவிநாசி நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டத்திற்காக, அன்னுாரில், நீரேற்று நிலையம் அமைக்கும் பணிகள் துவக்கியுள்ளது. மக்களின், 60 ஆண்டு கனவு நனவாகத் துவங்கியுள்ளதால், மக்கள் மகிழ்ச்சியடைந்து உள்ளனர்.கோவை, திருப்பூர் மாவட்டங்களில், மழை இல்லாமல், பல ஆயிரம் ஏக்கர் நிலங்கள் தரிசாகக் கிடக்கின்றன.
விவசாயப் பரப்பும், கால்நடை வளர்ப்பும் வெகுவாகக் குறைந்து விட்டது. விவசாய தொழிலாளர்கள், திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனிகளுக்கும், மில்களுக்கும் வேலைக்குச் செல்கின்றனர்.இப்பிரச்னைக்கு தீர்வு காண, பவானி ஆற்றில், வெள்ளக்காலங்களில் உபரியாகச் சென்று கடலில் கலக்கும் நீரைப் பயன்படுத்த வேண்டும். அந்த நீரில், கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மூன்று மாவட்டங்களில், 1,000க்கும் மேற்பட்ட குளம், குட்டைகளை நிரப்பும், அவிநாசி -அத்திக்கடவு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என, பல்வேறு அமைப்புகள், 60 ஆண்டுகளாகப் போராடி வந்தன. 1,652 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்தப் பணிக்கு, தமிழக அரசு பட்ஜெட்டில், 1,000 கோடி ரூபாய் ஒதுக்கியது. கடந்த பிப்., 28ம் தேதி அவிநாசியில் முதல்வர் தலைமையில் அடிக்கல் நாட்டு விழா நடந்தது. 'எல் அண்ட் டி' நிறுவனம், பணியை எடுத்துள்ளது.ஈரோடு மாவட்டம், பவானி அருகே, காளிங்கராயன் அணைக்கட்டுக்கு முன்னதாக, ஆற்றில் நீர் எடுக்கும் இடம் துவங்கி, அன்னுார் வரை, ஆறு இடங்களில் நீரேற்று நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.
இதில், ஆறாவது நீரேற்று நிலையம் அன்னுார் அடுத்த குன்னத்துாராம் பாளையத்தில் அமைக்க, ஒன்றே கால் ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டது. கடந்த ஆண்டு ஆக., மாதம் மண் பரிசோதனை நடந்தது.இந்நிலையில், நீரேற்று நிலையம் அமைப்பதற்காக பணிகள், குன்னத்துாராம் பாளையைத்தில் துவக்கப்பட்டுள்ளன. தேர்வு செய்யப்பட்ட இடத்தில், இரு இடங்களில் இரு தண்ணீர் தொட்டிகள் கட்டப்பட்டுள்ளன.
மேலும், கன்டெய்னர் வைப்பதற்கான கான்கிரீட் பில்லர்கள் அமைக்கப்பட்டுள்ளன. அன்னுாரிலிருந்து காரமடை வரும் குழாய்கள் செல்லும் வழித்தடத்தில் குறியீடுகள் போடும் பணி, ஒரு வாரமாக நடக்கிறது. களப்பணிகளும் துவக்கப்பட்டுள்ளன. இதனால், அன்னுார் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.1,048 குளங்கள்..அத்திக்கடவு-அவிநாசி நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்ட ஆர்வலர்கள் கூறியதாவது:இந்த திட்டத்தில், ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்டங்களில், 1,048 குளம், குட்டைகளில் நீர் நிரப்பப்பட உள்ளது. இதற்கு தேவையான மின்சாரத்திற்கு, சூரியஒளி மின் உற்பத்தி கூடம் அமைக்கப்படுகிறது.
குழாய்கள் மூலம் குளங்களுக்கு நீர் கொண்டு செல்லப்பட உள்ளதால், வழியில் நீர் சேதாரம் ஏற்படாது. 1,058 கி.மீ., துாரத்திற்கு குழாய்கள் பதிக்கப்பட உள்ளன. பணிகள் துவங்கியது மகிழ்ச்சி அளிக்கிறது. 60 ஆண்டு கனவு நனவாகிறது.இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால், ஈரோடு, திருப்பூர், கோவை என, மூன்று மாவட்டங்களில், 24 ஆயிரத்து 468 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும். குளம், குட்டைகள் நிரம்பி, நிலத்தடி நீர் மட்டம் உயரும். குடிநீர் பிரச்னை தீரும். விவசாய பரப்பு அதிகரிக்கும். கால்நடை வளர்ப்பு உயரும். வேலை தேடி நகரங்களுக்கு செல்வது நிற்கும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X