ஆதரவற்றோருக்கு அன்புச்சுவர் உதவிக்கரம் மையம் துவக்கம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஆதரவற்றோருக்கு அன்புச்சுவர் உதவிக்கரம் மையம் துவக்கம்

Added : ஜன 14, 2020
Share
விழுப்புரம்:விழுப்புரத்தில், ஆதரவற்றோர்களுக்கு பொருட்கள் வழங்குவதற்கான அன்புச்சுவர் முத்தோப்பு உதவிக்கரம் மையம் துவக்க விழா நடந்தது.விழுப்புரம், திரு.வி.க., வீதியில் ஆதரவற்றோர்களுக்கு ஆடைகள், காலணிகள், புத்தகம், கம்பளிகள், பொம்மை, உணவு பொருட்கள் சேகரித்து, வழங்குவதற்காக அன்புச்சுவர் முத்தோப்பு உதவிக்கரம் மையம் துவங்கப்பட்டுள்ளது. இங்கு, பொதுமக்கள் தேவையற்றதாக
 ஆதரவற்றோருக்கு அன்புச்சுவர் உதவிக்கரம் மையம் துவக்கம்

விழுப்புரம்:விழுப்புரத்தில், ஆதரவற்றோர்களுக்கு பொருட்கள் வழங்குவதற்கான அன்புச்சுவர் முத்தோப்பு உதவிக்கரம் மையம் துவக்க விழா நடந்தது.
விழுப்புரம், திரு.வி.க., வீதியில் ஆதரவற்றோர்களுக்கு ஆடைகள், காலணிகள், புத்தகம், கம்பளிகள், பொம்மை, உணவு பொருட்கள் சேகரித்து, வழங்குவதற்காக அன்புச்சுவர் முத்தோப்பு உதவிக்கரம் மையம் துவங்கப்பட்டுள்ளது. இங்கு, பொதுமக்கள் தேவையற்றதாக நினைக்கும் பொருட்களை எந்த நேரத்திலும் வழங்குவதற்கான வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.இந்த அன்புச்சுவர் முத்தோப்பு உதவிக்கரத்தை, நகராட்சி ஆணையர் தட்சணாமூர்த்தி துவக்கி வைத்தார்.
முன்னாள் சேர்மன் ஜனகராஜ், ஆதரவற்றோர்களுக்கு மையம் மூலம் துணிகளை வழங்கினார்.மாவட்ட எம்.ஜி.ஆர்., இளைஞரணி துணை தலைவர் ராமதாஸ், அச்சக கூட்டுறவு துணை தலைவர் குமரன் முன்னிலை வகித்தனர். முன்னாள் கவுன்சிலர் லுக்மான், உதயநிதி மன்ற செயலர் சங்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை, அன்புச்சுவர் முத்தோப்பு உதவிக்கரம் மைய நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X