பொது செய்தி

தமிழ்நாடு

சாலையோர புதர்கள் அகற்றம்

Added : ஜன 14, 2020
Advertisement
 சாலையோர புதர்கள் அகற்றம்

அவலுார்பேட்டை:தேவனுார் பகுதியில் உள்ள சாலையோர புதர்கள் 'தினமலர்' நாளிதழ் செய்தி எதிரொலியால் அகற்றப்பட்டன.
மேல்மலையனுார் அடுத்த தேவனுார் கிராமத்திலிருந்து கெங்கபுரம், சித்தேரி, கள்ளப்புலியூர் உள்ளிட்ட கிராமங்களுக்குச் செல்லும் சாலை உள்ளது. தேவனுார் அடுத்த கெங்கபுரம் ஏரிக்கரை அருகே சாலையோரங்களில், ஊர் பெயர் பலகைகளை மறைத்தபடி சாலையிலும் புதர்கள் மண்டியிருந்தன.இதனால், வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வந்தனர். இரு சக்கர வாகனங்கள் எதிரில் வாகனம் வந்தால் ஒதுங்கக்கூட இடமின்றி சிரமப்பட்டனர்.இதுகுறித்து 'தினமலர்' நாளிதழில் கடந்த சில தினங்களுக்கு முன் படத்துடன் செய்தி வெளியானது. இதனைத் தொடர்ந்து நெடுஞ்சாலைத் துறையினர் சாலையோர புதர்களை அகற்றினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X