பொது செய்தி

தமிழ்நாடு

வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க விருந்து வழங்கிய ஊராட்சி தலைவர்

Added : ஜன 14, 2020
Advertisement

அன்னுார்:அன்னுார் ஒன்றியத்தில், ஒரு ஊராட்சியில் வெற்றி பெற்ற ஊராட்சி தலைவர் மட்டன் பிரியாணி வழங்கி அசத்தினார்.ஊரக உள்ளாட்சி தேர்தல், கடந்த மாதம், 27, 30ம் தேதிகளில் நடந்தது. ஜன., 2ம் தேதி ஓட்டு எண்ணிக்கை முடிந்தது. மறைமுக தேர்தல், 11ம் தேதி முடிந்தது. இதுவரை உள்ளாட்சி தேர்தல் வரலாற்றில் இல்லாத அளவு இந்த தேர்தலில், பணம் விளையாடியது.சில ஊராட்சிகளில், வாக்காளர்களுக்கு, 200 ரூபாய் முதல் 3,000 ரூபாய் வரை வழங்கப்பட்டது. புடவை, சிக்கன், குவாட்டர், அரிசி சிப்பம் என, வாரி வழங்கப்பட்டது.இந்நிலையில், பிள்ளையப்பம் பாளையம் ஊராட்சியின் முன்னாள் துணை தலைவராக, அ.தி.மு.க.,வை சேர்ந்த லட்சுமண மூர்த்தி இருந்தார். இவர், இந்த தேர்தலில் ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட்டு மும்முனை போட்டியில் வெற்றி பெற்றார்.இதையடுத்து, நேற்று முன்தினம் மதியம் தனது தோட்டத்தில் வாக்காளர்களை அழைத்து விருந்து வைத்தார். 2,000 பேருக்கு வெள்ளை சாதம், மட்டன் குழம்பு, ரசம், தயிர், மட்டன் பிரியாணி, காளான் பிரியாணி என, சப்ளை செய்தார்.தேர்தலில் அதிக செலவு செய்வதால், வெற்றி பெற்ற பிறகு தலைவர்கள் வாக்காளர்களுக்கு வெறும் நன்றி மட்டும் தெரிவித்து விட்டு டாடா காண்பிப்பது தான் வழக்கம். ஆனால் இவர் வெற்றி பெற்ற பிறகும், 2,000 பேருக்கு மட்டன் பிரியாணி வழங்கியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X