பொது செய்தி

தமிழ்நாடு

கிளி விற்ற இரு பெண்களை கைது செய்தது வனத்துறை

Added : ஜன 14, 2020
Advertisement

பெ.நா.பாளையம்:துடியலுார் அருகே கிளி விற்பனையில் ஈடுபட்ட இரு பெண்களை வனத்துறையினர் கைது செய்தனர்.சரவணம்பட்டியில் சிவப்பு நிற மூக்குடைய அரிய வகை கிளிகளை இரண்டு பெண்கள் விற்பனை செய்து கொண்டிருந்தனர். பறவை ஆர்வலர்கள் இது குறித்து, கோவை வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் வருவதை அறிந்த பெண்கள், விற்பனைக்கு கொண்டு வந்த கிளிகளை, அங்கேயே போட்டு விட்டு, தப்பி ஓடினர். நேற்று முன்தினம், மீண்டும் துடியலுார் பஸ் ஸ்டாண்ட் அருகே, கிளிகளை விற்பனை செய்யும் நடவடிக்கையில் அப்பெண்கள் ஈடுபட்டனர்.இதுகுறித்து, தகவல் அறிந்ததும், கோவை வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து, பாதுகாக்கப்பட்ட வன விலங்குகள் சட்டம் 1972க்கு எதிராக கிளிகள் விற்பனையில் ஈடுபட்ட கிருஷ்ணவேணி, 50, பாக்கியம், 45, என்ற இரு பெண்களையும் கைது செய்தனர். இருவரும் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும், கிருஷ்ணவேணி கிளிகளை பிடித்து விற்பனை செய்யும் தொழிலை பல ஆண்டுகளாக செய்து வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.ஒரு கிளி, 300 ரூபாயிலிருந்து, 500 ரூபாய் வரை விற்பனை செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இருவரும், கோவை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X