பொங்கல் சங்கமம் விழா| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பொங்கல் சங்கமம் விழா

Added : ஜன 14, 2020
 பொங்கல் சங்கமம் விழா

விழுப்புரம்:விழுப்புரம் இ.எஸ்., கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், தமிழ் மன்றம் மற்றும் மகளிர் மன்றம் இணைந்து பொங்கல் சங்கமம் விழா நடந்தது.விழாவிற்கு, கல்லுாரி தலைவர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். கல்லுாரி முதல்வர் மனோகரன் வரவேற்றார். இதில், கபடி, உறியடி, கோலம், மல்லர் கம்பம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. காட்சி தொடர்பியல் துறை மாணவர்களின் பொங்கல் பற்றிய குறும்படம் வெளியிடப்பட்டது. மேலும், மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர்.கணிதத்துறை பேராசிரியர் கோவிந்தன், தமிழ் மன்ற ஒருங்கிணைப்பாளர் பரசுராமன், மகளிர் மன்ற ஒருங்கிணைப்பாளர் திவ்யா ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.தமிழ்த்துறை உதவி பேராசிரியர் வேலவன் நன்றி கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X