பொது செய்தி

தமிழ்நாடு

ஊராட்சிகளில் குப்பை சேகரிக்க பேட்டரி வாகனங்கள் வழங்கல்

Added : ஜன 14, 2020
Advertisement
 ஊராட்சிகளில் குப்பை சேகரிக்க பேட்டரி வாகனங்கள் வழங்கல்

தியாகதுருகம்:தியாகதுருகம் ஒன்றியத்தில் உள்ள கிராம ஊராட்சிகளுக்கு பேட்டரியால் இயங்கும் குப்பை சேகரிக்கும் வாகனம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ் தியாகதுருகம் ஒன்றியத்தில் உள்ள கிராம ஊராட்சிகளுக்கு பேட்டரியால் இயங்கும் குப்பை சேகரிக்கும் வாகனம் வழங்கப்படுகிறது. முதல் கட்டமாக 8 ஊராட்சிகளுக்கு 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 10 வாகனங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.பி.டி.ஓ.,க்கள் ராமதாஸ், இந்திராணி, அ.தி.மு.க., ஒன்றிய செயலர் அய்யப்பா, நகர செயலர் ஷியாம் சுந்தர், மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற துணைச் செயலர் கிருஷ்ணமூர்த்தி, துணை பி.டி.ஓ.,க்கள் ராஜேந்திரன், ராஜசேகர் முன்னிலை வகித்தனர்.
குப்பை சேகரிக்கும்வாகனங்களை கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ., பிரபு கொடியசைத்து துவக்கி வைத்தார்.உதவி பொறியாளர்கள் ஜெயந்தி, கோமதி, பணி மேற்பார்வையாளர்கள் முத்துராமன், பச்சமுத்து, பன்னீர்செல்வம், ஊராட்சி செயலர்கள் முத்துவேல், மாணிக்கம், ரவிச்சந்திரன், கணேசன், குமார் அ.தி.மு.க., நிர்வாகிகள் ராஜவேல் அய்யம்பெருமாள், செல்வராஜ், மணிவண்ணன், பாலகிருஷ்ணன், குமார், ரமேஷ், நம்பி, முரளி கிருஷ்ணா, ஜெயபிரகாஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X