சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தரணி சர்க்கரை ஆலையை கண்டித்து கரும்பு விவசாயிகள் போராட்டம்

Added : ஜன 14, 2020
Advertisement
 தரணி சர்க்கரை ஆலையை கண்டித்து கரும்பு விவசாயிகள் போராட்டம்

தியாகதுருகம்:விவசாயிகளுக்கு கரும்பு கிரய தொகையை வழங்கக்கோரி தரணி சர்க்கரை ஆலையை கண்டித்து தியாகதுருகத்தில் விவசாயிகள் போராட்டம்நடத்தினர்.
தியாகதுருகம் பஸ் நிலையம் அருகே நடந்த போராட்டத்திற்கு, அனைத்து விவசாயிகள் முற்போக்கு சங்கத் தலைவர் ஷாயின்ஷா தலைமை தாங்கினார். செயலர் கோவிந்தராஜ், துணைச் செயலர் கண்ணன், பாலு, ராஜமூர்த்தி, தெய்வீகன் முன்னிலை வகித்தனர். துணைத் தலைவர் ஏழுமலை வரவேற்றார்.கரும்புக்கான நிலுவைத் தொகையை கடந்த 15 மாதங்களுக்கு மேல் கொடுக்காமல் இருக்கும் தரணி சர்க்கரை ஆலை நிர்வாகத்தை கண்டித்து விவசாயிகள் பேசினர்.கரும்புக்கான ஆதார விலையை தரக் கோரியும், தனியார் சர்க்கரை ஆலைகள் பதிவு செய்துள்ள கரும்புகளை கூட்டுறவு சர்க்கரை ஆலைகளுக்கு நடப்பு பருவத்தில் வெட்டி அனுப்பவும் தமிழக அரசை வலியுறுத்தினர்.பொதுக்குழு உறுப்பினர்கள், கரும்பு விவசாயிகள் உட்பட நுாற்றுக்கணக்கானோர் போராட்டத்தில் பங்கேற்றனர்.பொருளாளர் ஜெய்சங்கர் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X