பொது செய்தி

தமிழ்நாடு

மார்கழி மாத பஜனை நிறைவு விழா

Added : ஜன 14, 2020
Advertisement
 மார்கழி மாத பஜனை நிறைவு விழா

சங்கராபுரம்:சங்கராபுரம் அடுத்த தேவபாண்டலத்தில் மார்கழி மாத பஜனை நிறைவடைந்தது.
சங்கராபுரம் வட்டம் தேவபாண்டலம் கிராமத்தில் பாண்டுவனேஸ்வரர் கோவிலில் மார்கழி மாதத்தை முன்னிட்டு பிரதோஷ வழிபாட்டு மன்றத்தினர், மற்றும் சைவ சித்தாந்த வகுப்பினர் தினமும் அதிகாலையில் திருப்பாவை, திருவெம்பாவை மற்றும் பஜனை பாடல்களை பாடி வந்தனர்.மார்கழி மாதம் நிறைவடைவதை முன்னிட்டு திருப்பாவை, திருவெம்பாவை பாராயணம் மற்றும் பஜனை குழுவினருக்கு பாராட்டு விழா சிவன் கோவில் வளாகத்தில் நடந்தது.
பிரதோஷ வழிபாட்டு மன்ற தலைவர் ராமலிங்கம் தலைமை தாங்கினார். பிராமணர் சங்கத் தலைவர் ரவி குருக்கள், வணிகர் பேரவை மாவட்ட பொருளாளர் முத்துக்கருப்பன், பத்திரிகையாளர் சங்க மாவட்ட தலைவர் மாரியாப்பிள்ளை முன்னிலை வகித்தனர். கணபதி வரவேற்றார்.திருப்பாவை, திருவெம்பாவை பாடல்களை தினமும் பாராயணம் செய்த குழுவினரை பாராட்டி பரிசு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஜெயமுருகன் குருக்கள், பிராமணர் சங்க செயலர் ஜெயக்குமார், வாசு, ஓதுவாமுர்த்தி அருள் மற்றும் சைவ சித்தாந்த வகுப்பினர், பிரதோஷ வழிபாட்டு மன்றத்தினர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X