பொது செய்தி

தமிழ்நாடு

தரமில்லாத உணவுபொருள்: தடுக்க வேண்டியவங்க எங்கே

Added : ஜன 14, 2020
Advertisement

என்னங்க இந்த ஊருல சாதாரணமா 'குட்கா' விக்கறாங்கனு, பெதப்பம்பட்டி நால்ரோட்டில், இளைஞர்கள் பேசிக்கொண்டிருந்தார்.அதற்கு உள்ளூர்வாசி ஒருவர், 'குடிமங்கலம் ஒன்றியத்துல, கவர்மென்ட் தடை பண்ணுன பிளாஸ்டிக் பொருள்; 'குட்கா' என, எது வேணும்னாலும் வித்துக்கலாம்.யாரும் கண்டுக்கறது இல்லை. மாசத்துக்கு ஒரு தடவை பிளாஸ்டிக் தடை விழிப்புணர்வுனு, அதிகாரிங்க, 'சீன்' போட்டுட்டு போயிருவாங்க.
அதுக்கப்புறம் எல்லா பொருளும் தாராளமா விக்கறாங்க. தள்ளு வண்டி கடையில, உடலுக்கு கேடு விளைவிக்கற கண்ட கண்ட பவுடரை கலக்கி, சாப்பிடற பொருள் விக்கிறாங்க.அதனால, டீத்துாள் கலப்படத்துல துவங்கி, 'சில்லி' சிக்கன் வரைக்கும் தரமில்லாம விக்கறாங்க.பொங்கலுக்கு, மாலகோவில் திருவிழாவுல, இஷ்டத்துக்கும் கடைகள திறந்து, தரமில்லாத பொருள விற்பாங்க.மாசமானா 'கட்டிங்' போறதால, இதையெல்லாம் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிங்க கண்டுக்க மாட்டாங்க.வந்தாரு புது கமிஷனருவிரட்டினாரு அதிகாரிகளவால்பாறை நகராட்சி அலுவலக வளாகத்துல எப்பவுமே, குப்பை லாரிகள், பழைய குப்பை வண்டிகள், தேவையில்லாத பொருட்கள் நெறஞ்சு இருக்கும். இன்னிக்கு என்ன எந்த வண்டியும் இல்லாம, படு சுத்தமா இருக்குனு, நகராட்சி ஊழியர் ஒருத்தரு கிட்ட விசாரிச்சேன்.போன வாரம், நகராட்சிக்கு புதுசா வந்த கமிஷனரு, அலுவலகத்த சுத்திப்பார்த்தாரு, சுகாதார அதிகாரிகளை அழைத்து, நகராட்சி அலுவலகமே இப்படி குப்பைமேடா இருந்தா, தெருவெல்லாம் எப்படி இருக்கும்.உடனே, இங்க இருக்கற வாகனங்களையெல்லாம் அப்புறப்படுத்தி, நகராட்சி அலுவலகத்தை சுத்தமாக வைக்கணும்னு 'டோஸ்' விட்டாரு.நகராட்சி ஊழியர்க, இரவு, பகலாக வேலை செஞ்சு, அலுவலகத்தை ஒரு வழியாக சுத்தம் செஞ்சாங்க. கொசு மருந்தும் அடிச்சாங்க.நகராட்சி அதிகாரிகளும், 'பெண்டிங்' பணிகள சுறுசுறுப்பா களமிறங்கி செய்யறாங்க.
புதுக் கமிஷனர் வரவால, நகராட்சி ஊழியர்கள் மட்டுமின்றி, ஆளும்கட்சியினரும் ஆடிப்போயி இருக்காங்க, என்றார்.இப்படியே இருந்தா, நல்லா இருக்கும். பூவோட சேர்ந்து நாரு மணக்குமானு பொருத்திருந்து பார்ப்போம்.லஞ்ச பேர வீடியோ வைரல் 'கமிஷன்' அதிகாரிக கலக்கம்'என்னங்க சார், ஆனைமலையில ஒரே பரபரப்பா இருக்கு விசாரிச்சிங்களா,' எனக்கேட்டார் நேர்மையான வருவாய்த்துறை அதிகாரி ஒருவர்.'என்னங்க சார் பரபரப்பு, என்ன விஷயம்,' எனக்கேட்டேன்.
அதற்கு அவர், 'ஆனைமலை, பெரியபோது கிராமத்துல கிராம உதவியாளர், பட்டா மாறுதலுக்கு 'கறாரா லஞ்ச பேரம்' பேசன வீடியோ வைரல் ஆச்சு.அவர, 'டிரான்ஸ்பர்' பண்ணி, அப்புறம் 'சஸ்பெண்ட்' பண்ணினாங்க. இதனால, கிராம உதவியாளர், 'நம்மல காட்டி கொடுத்துருவாரோனு' நெனச்சு வைட்டமின் 'ப' பார்த்த அதிகாரிங்க கதிகலங்கி போயிருக்காங்க.பட்டா மாறுதல், உரிமைச்சான்றுனு பல சான்றுகளுக்கு லஞ்சம் வாங்கிட்டு இருந்தவங்க, இப்ப டப்புனு 'கவனிப்பு' வசூல நிறுத்திட்டு 'கைய கட்டிட்டு' அமைதியா இருக்காங்க.மாச மாசம் இதேமாதிரி ஒரு ஆளு மாட்டுனா, லஞ்சம் வாங்காம கம்முனு இருப்பாங்க; மக்களுக்கும் எல்லா வேலையும் ஜம்முனு நடக்கும்.
அரசு துறைக்கு நல்ல பேரு கிடைக்கும்.பதிவெண் எழுதாத வாகனங்கள் பறக்குதுபொள்ளாச்சி - உடுமலை ரோட்டில், நண்பருடன் பேசிக்கொண்டு இருந்தேன். அவருடனான பகிர்வில் இருந்து...புதுசா வாகனம் வாங்கும் போது, ஆர்.டி.ஓ., அலுவலகத்தில பதிவு செய்து எண் வாங்கிய பின்னரே வாகனத்தை கொடுக்கணும்.ஆனா, இந்த விதியை யாரும் பாளோ பண்ணுறது இல்ல, பதிவு செய்வதால் ஏற்படும் பலன் குறித்தும் வாகன ஓட்டுனர்களுக்கும் தெரிவதில்ல.
இதனால, காசு கொடுத்து, புது வண்டியை வாங்கிட்டு வந்துடுறாங்க, வேற ஒரு நாள்ல போய் பதிவு பண்ணுறாங்க; இதுதான் நடந்துக்கிட்டு இருக்கு.அதுலயும் பதிவு செஞ்ச சிலர், பதிவெண் கூட எழுதாம வாகனத்த ஓட்டுறாங்க. 'யூஸ்டு' வாகனம் வாங்கறவங்களும், பேரு மாத்தாம ஓட்டுறாங்க.தடுக்க வேண்டிய போலீசாரும், ஆர்.டி.ஓ., அதிகாரிகளும் கண்டுக்கிறதில்ல; அந்த மாதிரி வாகனங்க, விபத்துக்குள்ளானா போலீஸ், ஆர்.டி.ஓ., அதிகாரிக ஜாக்பாட் அடிச்ச மாதிரி, வசூல்ல மட்டும் குறியா இருக்காங்க. தப்பு நடக்கறத தடுக்க மாட்டீங்கறாங்கனு, சொன்னாரு.'பவர் சென்டர்கள்' மோதல் ஆளுங்கட்சியில உள்ளடிஅ.தி.மு.க., கோட்டைன்னு வர்ணிக்கப்படுற பொள்ளாச்சில, உள்ளாட்சி தேர்தல்ல, தெற்கு ஒன்றியத்தில ஆளுங்கட்சி அடி வாங்கிடுச்சு.
இதுக்கு என்ன காரணம்னு விசாரிச்சா, பின்னடைவுக்கு காரணமே ரெண்டு 'பவர் சென்டர்கள்' மோதல்தானு சொன்னாங்க. ஒரே சமுதாயத்த சேர்ந்த ரெண்டு ஆளுங்கட்சி முக்கியஸ்தர்களும், தங்கள் ஆதரவாளர்களுக்கும், கட்சிக்கும் யார் 'லீடர்' அப்படிங்கற போட்டி ரொம்ப நாளா புகைஞ்சிட்டு இருக்கு.தேர்தல்ல, ரெண்டு கோஷ்டியும் ஆதரவாளர்கள களமிறக்கினாங்க. ரெண்டு தரப்புமே உள்ளடி வேல செஞ்சதால, பின்னடைவு ஏற்பட்டுச்சு.
இதுல ரெம்பவும் பாதிக்கப்பட்ட 'கேபிள்'காரரு, பிரச்னைய தலைமை கிட்ட கொண்டு போயிருக்காரு. தலைமை யாரு பக்கம் சாயும்னு தெரியலனு, ஆளுங்கட்சி வட்டாரத்துல தகவல் கசிந்தது.வசூலிக்கும் அபராதத்தஎங்கே செலுத்துவதுஉடுமலை பஸ் ஸ்டாண்டுல, 'டூட்டி'ல இருந்த போலீசார் ஒருவர் கூறியது.உடுமலையில, மது போதையில் வாகனம் ஓட்டுறவங்க கிட்ட, அஞ்சாயிரத்துல இருந்து, பத்தாயிரம் ரூபா வரைக்கும் போலீசார் வசூல் செய்யறாங்க.'இ - சலான்' முறையில, அபராதத்தொகை நிர்ணயிக்கப்படாத நிலையில, உரிய நீதிமன்றத்திலும் ஆஜர் படுத்தி, அபராதம் நிர்ணயிக்க முடியாத நிலை இருக்கு.இதனால, வசூல் செய்யுற பணம் அனைத்தும், எங்கு போகுதுனு தெரியவில்ல.
போலீசார் அதிக வாகனங்களை தணிக்கை செஞ்சு, அரசுக்கு போக வேண்டிய அபராத தொகைய, பாக்கெட்டுல போட்டுட்டு போறாங்க.அபராதம் வசூல் குறித்து, உயர் அதிகாரிக தெளிவான வழிகாட்டுதல் இல்ல. இதனால, பறிமுதல் செய்த வாகனத்த மீட்க முடியாலும், மீட்க முயற்சித்தால், கூடுதலா அபராத விதிச்சாலும், கட்டுகிறேன்னு எழுதிக்கொடுத்துட்டு வாகனத்த எடுத்துத்து போறாங்க.
ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷன்லும், பல ஆயிரம் ரூபா அபராத தொகை அரசுக்கும் செல்லாமல், தேங்கி கிடக்குதுனு, புலம்பினார்.அமராவதி ஆத்துல அமோகம்ஜோரா நடக்குது மணல் கடத்தல்அமராவதி அணை பக்கமா செய்தி சேகரிக்க சென்றோம். மண் அள்ளிட்டு வாகனங்கள் வேகமா போயிட்டு இருந்தது. தடையை மீறி எப்படி மணல் அள்ளறாங்கனு விசாரித்தோம்.
அமராவதி அணை அருகே, நவால் ஓடை, கல்லாபுரம், அமராவதி நகர் பஸ் நிலையம் அருகிலுள்ள பாறை செட்டில்மென்ட் ஓடை, லிங்கமாபுதுார் தேக்கன் கரடு, பொன்னிக்காட்டு துறை, ராமகுளம் பகுதி, குருவக்குளம் கோவில் அருகில் உள்ள ஓடை, அமராவதி ஆற்றில், ருத்திராபாளையம், மயிலாபுரம், கொழுமம் பாலம் என பல இடத்துல, மணல் கடத்தல் ஜோரா நடக்குது.மணல குவிச்சு வச்சு, மூட்டை 60 ரூபாய்க்கும், கனரக வாகனங்கள் மூலம் அள்ளி, டிராக்டர்கள், சரக்கு வேன், லாரிகளுக்கு விக்கறாங்க.
ஆளுங்கட்சி ஆதரவுல, பல இடங்களுக்கு மணல் கடத்தறாங்க.ஆளுங்கட்சிக்கு அடங்கி போகற, வருவாய்த்துறை, போலீஸ் அதிகாரிக, கடமை தவறாம, 'சன்மானம்' வாங்கிக்கறாங்க. இப்படியே போச்சுனா, ஆத்தக்காணோம்னு போலீஸ்ல புகார் கொடுக்கணும்னு, சொன்னாங்க.வாக்காளராகி கடமையாற்றஇளைஞர்களிடம் ஆர்வம்உடுமலையில் நடக்கும், வாக்காளர் பட்டியல் பெயர் சேர்க்க சிறப்பு முகாமில், பெயர் சேர்க்க படிவம் கொடுக்கு இளைஞர்களிடம் ஆர்வம் அதிகம் இருந்தது.
இவ்வளவு நாளா கண்டுக்காதவங்க, இப்ப, இப்படி குவியறாங்களேனு விசாரித்தோம்.ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிஞ்சு போச்சு. இனி, நகர உள்ளாட்சிகளுக்கு தேர்தல் நடத்தணும். அதுக்கு முன்னாடி, வாக்காளர் பட்டியல்ல, பேரு சேர்க்க சிறப்பு முகாம் நடக்குது. வாக்காளரா இருந்தாத் தான், 'எல்லாமே' கிடைக்கும். அதே மாதிரி வாக்காளரா இருந்தா, தேர்தல்ல களமிறங்க முடியும். அதனால, தேர்தல குறி வச்சு, நிறைய பேரு வாக்காளர் பட்டியலை பார்வையிட்டு, பேரு சேர்க்க படிவம் கொடுக்கறாங்க.கட்சிக்காரங்களும், அந்தந்த வார்டுல ஆதரவ பெருக்க, ஆதரவாளர்க பெயர சேர்க்க போட்டி போட்டு படிவங்களோட அனுப்பி வைக்கறாங்க.
இதுவும், ஒரு வகையா ஜனநாயக புரட்சி தான், என, அந்த அதிகாரி 'கமென்ட்' அடித்தார்.லஞ்சம் வசூலுக்கு, இது புது டெக்னிக்!பொள்ளாச்சி மேற்கு போலீஸ் ஸ்டேஷன் போயிருந்தேன். அங்கிருந்த போலீசார், உள்ளூர் பிரமுகர்கள் பெயரை லிஸ்ட் போட்டுட்டு இருந்தாங்க.'லிஸ்ட்' எதுக்குனு நேர்மையான போலீஸ் ஒருத்தரு கிட்ட விசாரிச்சேன்.'உங்களுக்கு விஷயமே தெரியாதா சார். நம்ம ஸ்டேஷன்ல எல்லாத்துக்கும் ஒரு 'லிஸ்ட்' இருக்கு.
இதுக்கு முன்னாடி, தீபாவளிக்கு 'லிஸ்ட் போட்டு' ஸ்டேஷன் லிமிட்டுக்குள்ள இருக்கற, கம்பனி, பெரும்புள்ளிகள், அரசியல் தலைவர்கள அணுகி, இயலாதவங்களுக்கு ஏதாவது உதவி செய்யணும்னு சொல்லி, வசூல் வேட்டை நடந்துச்சு. இப்ப, பொங்கல் வசூலுக்கு 'லிஸ்ட்' ரெடி. இல்லாதவங்களுக்கு வேட்டி, சட்டை, சேலை கொடுக்கறதுக்குனு சொல்லி வசூல் துவங்கியிருக்கு. குறஞ்சது, 20 ஆயிரம், பெரிய ஆளுனா, 50 ஆயிரம். ஐந்தாயிரத்துக்கு குறைவா யாரு கிட்டயும் பணம் வாங்கறதில்ல.ஹான்ஸ், லாட்டரி, கஞ்சா, சில்லிங், ரேஷன் அரிசி விக்கறவங்களுக்கு, 'ரேட் பிக்ஸ்' பண்ணி தனியா வசூல் நடக்குது.
இப்படி கையேந்தி வசூலிச்ச பணத்துல, கண்துடைப்புக்கு சிலருக்கு ஏதாவது கொடுத்துட்டு, மீதியெல்லாம் எஸ்.ஐ., பார்த்துக்குவாரு.ஸ்டேஷனுக்கு ஏதாவது வேலைக்கு போக வேண்டியிருக்கும்னு, அவரு கேட்கறத கொடுக்கறாங்க, எங்க மானம் போகுதுனு வேதனையோட சொன்னாரு. லஞ்சம் வசூலுக்கு இது ரெம்ப புதுசா டெக்னிக்கா இருக்கு. இயலாதவங்களுக்கு உதவணும்னா, சொந்த பணத்துல செலவு செய்யணும். இப்படி, 'சின்ன' புத்தி இருந்தா, போலீஸ் இமேஜ் பெருசா டேமேஜ் ஆகும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X