பொது செய்தி

தமிழ்நாடு

காட்டுவனஞ்சூரில் கூடாரவள்ளி வைபவம்

Added : ஜன 14, 2020
Share
Advertisement
 காட்டுவனஞ்சூரில் கூடாரவள்ளி வைபவம்

சங்கராபுரம்:சங்கராபுரம் அடுத்த காட்டுவனஞ்சூரில் கூடார வள்ளி வைபவம் நடந்தது.காட்டு வனஞ்சூர் ராமர் கோவிலில் நேற்று முன்தினம் கூடாரவள்ளியை முன்னிட்டு கிருஷ்ணர், ஆண்டாள் சுவாமிகளுக்கு பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட வாசனாதி திரவியங்களால் சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. பின்னர் சர்வ அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.சங்கராபுரம், கள்ளக்குறிச்சி, நீல மங்களம், மஞ்சபுத்துார் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட பாகவதர்கள் கலந்து கொண்டு பஜனை பாடல்கள் பாடினர். இரவு அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் சுவாமி நகரின் முக்கிய வீதிகள் வழியாக வீதியுலா வந்தது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா வெங்கடேச பாகவதர், ஓய்வு பெற்ற துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அன்பழகன், கோவில் பூசாரி அருள் ஆகியோர் செய்திருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X