பொது செய்தி

தமிழ்நாடு

பாரம்பரியம் காக்கும் இளைஞர்கள்

Added : ஜன 14, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
 பாரம்பரியம் காக்கும் இளைஞர்கள்

பொங்கல் பண்டிகை என்றாலே கிராமங்கள் திருவிழா கோலம்பூண்டு களைகட்டி விடும். நகரத்தில் இல்லாத இயற்கை, மண் வாசம், பாசத்துடன் உபசரிப்பு என மண்ணுக்கு பெருமை சேர்க்கும் கிராமங்களில் பொங்கல் விழா கொண்டாட்டங்களுக்கு பஞ்சம் இருக்காது.
விவசாயத்துக்கு உறுதுணையான கால்நடைகளுக்கு மரியாதை, சூரியனுக்கு பொங்கல் என, ஒவ்வொரு பொங்கலுக்கும் பல காரணங்கள் உண்டு. மார்கழி மாதத்திலேயே, பொங்கல் விழா கொண்டாட்டம் ஆண்டுதோறும் களை கட்ட துவங்கிவிடும். காலையில் வேலைக்கு சென்றாலும், இரவில் கூடி, பாரம்பரிய நடனங்களை ஆடி மார்கழி மாதத்தை கொண்டாடுவது வழக்கம்.ஒற்றுமையை பறை சாற்றும் வகையில் உள்ள பாரம்பரிய கலைகள், அழியாமல் பாதுகாக்க பொங்கல் பண்டிகையும் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால், பொங்கல் பாரம்பரியம், கலைகள் இன்றைய இளைஞர்களிடம் சென்றடையவில்லை. அதனால், பள்ளி, கல்லுாரிகளில் பொங்கல் விழா கொண்டாடி பழமையை போற்றி, பாரம்பரியத்தை கற்பிக்கின்றனர்.

பொள்ளாச்சி பகுதியில் இன்னும் பழமை மாறாமல் சலகெருது, தேவராட்டம் உள்ளிட்ட நடனங்களை ஆடி மகிழ்ந்து வருகின்றனர்.தேவராட்டம்கிராமங்களில், தேவராட்டம் எனப்படும் உருமி இசைக்கேற்ப ஆடும் ஆட்டத்துக்கு இன்னும் மவுசு உள்ளது.மார்கழி மாத பனிப்பொழிவுக்கு நடுவில் நள்ளிரவு நேரத்தில் ஆட்டக்காரர்கள் தலையில் தலைப்பாகையும்; கால்களில் சலங்கை கட்டிக்கொண்டும்; உருமி மேள இசைக்கேற்ப ஆடுகின்றனர்.

இறைவனை வழிபடவும், வேட்டைக்கு செல்லும் போது பாவனை ஆட்டமாகவும், மழை, திருமணம் போன்ற விசேஷ காலங்களில், சடங்கு ஆட்டமாகவும் நிகழ்த்தப்படுகிறது. தேவராட்டத்தில், 32 அடவுகள் உள்ளன.சலகெருது ஆட்டம்பொங்கல் பண்டிகையன்று, மாடுகள் ஈன்றெடுக்கும் காளை கன்றுகள், இறைவனுக்கு சொந்தமானதாக கருதப்படுவதால், அவற்றை கோவில்களுக்கு தானமாக வழங்கும் வழக்கம் இன்றும் நடைமுறையில் உள்ளது.அதனை தத்தெடுக்கும் கிராம மக்கள், அவற்றை சலங்கை மாடுகளாக மாற்றி வளர்க்கின்றனர்.
கிராமப் புறங்களில், சலங்கை மாடு தேர்வு செய்து, சிறு வயது முதலே பயிற்சி அளிக்கின்றனர். மார்கழி மாத இரவுகளில், முறையான பயிற்சி பெற்ற ஆட்டக்காரர்கள் காலில் சலங்கை கட்டிக்கொண்டும், கைகளில் குச்சிகளை கொண்டும் உறுமி மேல இசைக்கேற்ப மாட்டின் முன் நடனமாடுவர்.ஆட்டக்காரர்களின் அசைவிற்கும், இசைக்கும் ஏற்ப மாடு அவர்களை பின்தொடர்ந்து, தலையைாட்டிக்கொண்டே வரும்.
ஆட்டத்தில் சிறு மாற்றம் ஏற்பட்டாலும் முட்டுவது போல மாடு வரும். தரையில் கம்பு ஊன்றினால் மீண்டும் கட்டுப்படும். இதுபோன்று, ஒயிலாட்டம், கும்மியாட்டம் என பாரம்பரிய நடனங்கள் மறையாமல் பாதுகாக்கும் வகையில், கிராமங்களில் மக்கள் ஆடி மகிழ்கின்றனர்.களைகட்டும் கல்லுாரிகள்வாட்ஸ்அப், பேஸ்புக் என சமூக வலைதளங்களில் மூழ்கினாலும், பொங்கல் பண்டிகையை இளைஞர்கள் பாரம்பரிய முறையில் கொண்டாட தவறுவதில்லை.
கல்லுாரிகளில் நடக்கும் பொங்கல் விழாக்களில், பாரம்பரிய நடனங்களை ஆடி கிராமிய மனம் வீச வைத்து இளைஞர்கள் அசத்துகின்றனர்.பாரம்பரிய நடனத்தை கற்பதில் மாணவர்கள் ஆர்வம் காட்டுவதால், அவை இன்னும் அழியாமல் பாதுகாக்கப்படுகிறது.ஓட்டமாய் ஓடிக்கொண்டிருக்கும் வாழ்க்கையில், பல மாற்றங்கள் ஏற்பட்டாலும், இன்னும் கிராமப்புறங்களில், புதுமையோடும், புத்துணர்வோடும் வாழும் கலைகளாக உள்ளன. கல்லுாரிகளில் விழாக்கள் நடத்தி, கிராம நிகழ்வுகளை வளாகத்தினுள் கொண்டு வரும் போது, ஆண்கள் வேட்டியும், பெண்கள் சேலை உடுத்தும், கும்மியடித்து, குலவை எழுப்பி பொங்கலிட்டு கொண்டாடுகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
14-ஜன-202006:34:10 IST Report Abuse
ஆப்பு எல்லாத்தையும் பொது இடத்தில் போட்டு கொளுத்தி சுற்றுச் சூழலை மாசு படுத்தும் பாரம்பரியத்தை பாதுகாப்போம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X