சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஏலச்சீட்டு நடத்தி ரூ.2 கோடி மோசடி பணத்தை மீட்டு தரக்கோரி மனு

Added : ஜன 14, 2020
Advertisement
 ஏலச்சீட்டு நடத்தி ரூ.2 கோடி மோசடி பணத்தை மீட்டு தரக்கோரி மனு

கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சியில், ஏலச்சீட்டு நடத்தி 2 கோடி ரூபாய் மோசடி செய்தவரிடமிருந்து பணத்தை மீட்டு தரக்கோரி பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கலெக்டரிடம் புகார் மனுஅளித்தனர்.
இது குறித்து பல்வேறு பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், கலெக்டர் கிரண் குராலாவிடம் அளித்த மனு:கள்ளக்குறிச்சி ராஜா நகரைச் சேர்ந்தவர் கபிலன். இவர், கள்ளக்குறிச்சியில் ஆர்.கே.எம்., சிட்பண்ட்ஸ் பிரைவேட் லிமிடெட், என்ற பெயரில் ஏலச்சீட்டு நடத்தி வந்தார். இவரிடம் வரதப்பனுார், ராமராஜபுரம், வடக்கனந்தல், கச்சிராயபாளையம், நமச்சுவாயபுரம், கரடிச்சித்துார், சின்னசேலம், மஞ்சபுத்துார், நல்லாத்துார், பாண்டலம், விரியூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்டோர் மாதம் தோறும் 2 கோடி ரூபாய் அளவில் ஏலச்சீட்டு கட்டி வந்தனர்.இந்நிலையில், திடீரென கபிலன் தலைமறைவாகியுள்ளார். இது தொடர்பாக காவல் நிலையத்திலும் புகார் செய்யப்பட்டுள்ளது.எனவே, ஏலச்சீட்டு நடத்தி பணத்தை அபகரித்து தலைமறைவாக உள்ள கபிலனை பிடித்து உரிய நடவடிக்கை எடுத்து, அவரிடமிருந்து எங்களுக்கு சேர வேண்டிய பணத்தை மீட்டுத்தர வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X