பொது செய்தி

தமிழ்நாடு

திருக்கோவிலுார் உலகளந்த பெருமாள் கோவிலில் ராப்பத்து உற்சவம்

Added : ஜன 14, 2020
Share
Advertisement
 திருக்கோவிலுார் உலகளந்த பெருமாள் கோவிலில் ராப்பத்து உற்சவம்

திருக்கோவிலுார்:திருக்கோவிலுார் உலகளந்த பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி ராப்பத்து உற்சவத்தில் பெருமாள் பனிப் போர்வை போர்த்தி ஆஸ்தானம் எழுந்தருளினார்.
திருக்கோவிலுார் உலகளந்த பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழாவின் ஒரு பகுதியாக, ராப்பத்து உற்சவம் கடந்த 21ம் தேதி முதல் துவங்கி நடந்து வருகிறது. நேற்று முன்தினம் மாலை 6:00 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவி சமேதராக தேகளீச பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் மூலஸ்தானத்திலிருந்து எழுந்தருளி, கோவிலை வலம் வந்து, உடையவர் சன்னதியில் மண்டகப்படி நடந்தது.சொர்க்கவாசல் வழியாக பெருமாள் எழுந்தருள, நம்மாழ்வார் எதிர்கொண்டு செய்விக்க, பரமபத மண்டபத்தில் எழுந்தருளினார்.இரவு 8:30 மணிக்கு திருவாய்மொழி, சேவை சாற்றுமறை, தீபாராதனை, பக்தர்களுக்கு பிரசாதம் விநியோகம் நடந்தது.பெருமாள் மெல்லிய இழை கொண்ட போர்வையால் திருமுகம் தெரிய போர்த்தப்பட்டு, ஆஸ்தானம் எழுந்தருளினார். இக்காட்சியைக் காணும் பக்தர்களுக்கு பாக்கியம் கிட்டும் என்பது ஐதீகம். விழாவின் நிறைவாக நாளை 15ம் தேதி இரவு நம்மாழ்வார் மோட்சம் அடையும் வைபவம் நடக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X