பொது செய்தி

தமிழ்நாடு

ஆநிரை கவர்தல்... வரலாற்று சின்னங்கள்! செல்வக்குறியீடாக விளங்கிய கால்நடைகள்

Added : ஜன 14, 2020
Share
Advertisement
 ஆநிரை கவர்தல்... வரலாற்று சின்னங்கள்! செல்வக்குறியீடாக விளங்கிய கால்நடைகள்

செல்வத்தின் குறியீடாக ஆநிரைகள் கூட்டமும், அவற்றை கவர்ந்து செல்பவர்களிடம் இருந்து மீட்டவர்களுக்கும் சிலை வைத்து வரலாறு அறிய செய்வதிலும் முன்னோர்கள் தனித்துவம் காட்டியுள்ளனர்.நாகரீக வளர்ச்சியில் குடியிருப்புகள் உருவான பின், கால்நடைகள் வளர்ப்பும், விவசாயமும் முக்கிய தொழிலானது.
அதன்படி, குடும்பத்தினர் பராமரிக்கும், கால்நடைகளின் எண்ணிக்கையை பொறுத்தே, செல்வ வளத்தை தீர்மானிக்கும் அளவுக்கு, ஆநிரைகள் எனப்படும் கால்நடைகள் முக்கிய பங்கு வகித்ன.வனத்தை அழித்து, குடியிருப்புகளை ஏற்படுத்தி, கால்நடைகளுக்கான பட்டி அமைக்கப்பட்ட பின், கிராமங்கள் உருவாகியுள்ளன. இவ்வாறு, முக்கியத்துவம் வாய்ந்த ஆநிரைகளை கவர்ந்து செல்வதும், அவற்றை மீட்பதும், முக்கிய நிகழ்வாக கருதப்பட்டுள்ளன. அவ்வகையில், ஆநிரைகளை கவர்ந்து சென்றவர்களிடம் இருந்து மீட்டு வந்தவர்களுக்கு சிலைகள் வைத்து, அவ்வீரர்களின் வரலாறு அறிய செய்துள்ளனர்.இதே போல், மன்னர்கள், பாளையக்காரர்கள் சிலையிலும், குதிரை, மாடு, ஆடு, நாய் உள்ளிட்ட விலங்குகளின் உருவங்களையும் இடம் பெறச்செய்து, குடும்பத்தில் ஒருவராக பாவித்துள்ளனர்.உடுமலை அருகே, மேற்குத்தொடர்ச்சிமலை அடிவாரத்தில், புதிதாக கிராமங்கள் உருவாக்கப்பட்ட போது, கால்நடைகளை வனவிலங்குகளிடம் இருந்து பாதுகாப்பதும் பெரும் சிக்கலாக இருந்துள்ளது. புலி, நரி உள்ளிட்ட வேட்டை விலங்குகளிடமிருந்து போராடி, கால்நடைகளை மீட்ட வீரர்களுக்கு சிலை வைத்து பெருமை சேர்த்துள்ளனர்.
இத்தகைய போராட்டத்தில், உயிர் நீத்தவர்களின் குடும்பத்துக்கு, நிலதானமும் வழங்கப்பட்டுள்ளது. உடுமலை பகுதியில், ஜல்லிபட்டி, புக்குளம், உடுமலை வனச்சரக பகுதி உட்பட இடங்களில் புலி குத்தி கற்கள் வரலாற்று ஆய்வாளர்களால் கண்டறியப்பட்டுள்ளன. இதே போல், பிற சிலைகளில், மன்னர்கள் உட்பட ஆட்சியாளர்களுடன், கால்நடைகளின் உருவங்களும் இடம் பெற்றுள்ளன.
வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகையில், 'இரு நாடுகளுக்கு இடையே போர் ஏற்படும் முன், ஆநிரை கவர்தலும், அதை மீட்டலும், முக்கிய நிகழ்வாக இருந்துள்ளன. ஆநிரைகளை பாதுகாக்க, நாட்டுக்காவல் உட்பட பல்வேறு காவல் முறைகளும், செயல்பாட்டில் இருந்துள்ளன. இனக்குழு மக்களின் வாழ்வியலில், ஆநிரைகளே நிலைத்த நீடித்த செல்வ செழிப்பின் குறியீடாக இருந்துள்ளது. கால்நடைகளின் பெருமையையும், மண்ணின் வரலாற்றையும், பல நுாற்றாண்டுகளாக தாங்கி நிற்கும் இச்சிலைகள் பராமரிப்பின்றி அழிவது வேதனையளிக்கிறது,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X