விபத்து அதிகரிப்பு

Added : ஜன 14, 2020
Advertisement

உடுமலை, வாசவி நகரில் வாகனங்கள் அதிவேகமாக வருவதால், விபத்துகள் அதிகரிக்கின்றன. போக்குவரத்து துறையினர் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.எஸ்.கனகராஜ்,உடுமலை.திருட்டு பயம்உடுமலை, சிவலிங்கம்பிள்ளை லே-அவுட் பகுதியில், தெருவிளக்குகள் எரியாமல் இருப்பதால், இரவில் திருட்டு பயம் அதிகரிக்கிறது.வி.பார்வதி,உடுமலை.வாகனங்கள் விதிமீறல்உடுமலை, தளி ரோட்டில், வாகனங்கள் விதிமுறை மீறி நிறுத்தப்படுவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.எம்.ஆனந்த்,உடுமலை.ரோடெல்லாம் நெரிசல்பொள்ளாச்சி பழைய பஸ்ஸ்டாண்ட் பின்புறம் ஐயப்பன் கோவில் ரோடு பல்வேறு ஆக்கிரமிப்புகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.கே.ராம்குமார்,பொள்ளாச்சி.மின்வேலி அமைக்கணும்!வால்பாறை அரசு மருத்துவமனையில், இரவு நேரத்தில் சிறுத்தை நடமாடுவதை தவிர்க்க, வனத்துறை சார்பில் மின்வேலி அமைக்க வேண்டும்.வில்சன்,வால்பாறை.சுகாதாரமில்லாத கழிப்பிடம்பொள்ளாச்சி பழைய பஸ்ஸ்டாண்டில் உள்ள கழிப்பிடம் போதிய பராமரிப்பின்றி உள்ளது. இதனால், பயணிகள் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர்.எம்.தேவானந்த்,பொள்ளாச்சி.ரோட்டில் ஆக்கிரமிப்புபொள்ளாச்சி சப் - கலெக்டர் அலுவலகம், பி.எஸ்.என்.எல்., அலுவலகம் அருகே, ரோடு ஆக்கிரமிக்கப்பட்டு, குறுகியுள்ளதால் வாகன நெரிசலும், விபத்துக்களும் தொடர் கதையாகியுள்ளது.ஆர்.சுரேஷ்,பொள்ளாச்சி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X