நாய்கள் அறுவை சிகிச்சை முடக்கம்: தினமும் 'கடி'யால் அச்சத்தில் மக்கள்

Added : ஜன 14, 2020
Advertisement

ஆனைமலை:மாநகராட்சி, நகராட்சி மற்றும் ஊரக பகுதிகளில் தெரு நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த நாய்கள் அறுவை சிகிச்சை மையம் கட்டும் திட்டத்தை அரசு உருவாக்கியது. திட்டத்தின்படி, தெரு நாய்களை பிடிக்க பயிற்சி வழங்கப்பட்டு, பணியாளர்களைக் கொண்டு நாய்கள் பிடிக்கப்படும்.அறுவை சிகிச்சை மையத்துக்கு நாய்கள் கொண்டுவரப்பட்டு, கால்நடை மருத்துவரால் கருத்தடை செய்யப்பட்டு, பராமரிப்புக்கு பின், பிடிக்கப்பட்ட பகுதியில் விடப்படும். நாய் அறுவை சிகிச்சை மையத்தால் குடியிருப்பு பகுதிகளில் தெரு நாய்களின் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்படும்.இந்நிலையில், ஆனைமலை, வேட்டைக்காரன்புதுார், ஒடையகுளம் பேரூராட்சிகளில், பல ஆண்டுகளாக நாய்கள் அறுவை சிகிச்சை மையம் கட்டப்படாமல், திட்டம் செயல்படுத்தப்படாமல் உள்ளது. கோட்டூர் பேரூராட்சியில் அறுவை சிகிச்சை மையம் கட்டப்பட்டு, பல ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் காட்சிப்பொருளாக உள்ளது.இதனால், தெருநாய்களின் தொல்லை அதிகரித்து, காணும் இடமெல்லாம் மக்களை கடித்துக் குதறுகின்றன. நாய்கள் திடீரென ரோட்டை கடப்பதால், அடிக்கடி விபத்துக்கள் நடக்கிறது. பேரூராட்சியினர் தெருநாய்கள் அறுவை சிகிச்சை மையம் அமைத்து, தெருநாய்கள் எண்ணிக்கையை கட்டுப்படுத்த வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாகும்.கோட்டூர் மற்றும் வேட்டைக்காரன்புதுார் அரசு மருத்துவமனை டாக்டர்கள் கூறியதாவது:தினமும், வேட்டைக்காரன்புதுார் அரசு மருத்துவமனைக்கு, நான்கு முதல் ஐந்து பேர் தெருநாய் கடிக்கு சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். குறிப்பாக, வேட்டைக்காரன்புதுார், ஒடையகுளம் பகுதியில் இருந்து அதிகம் பேர் வருகின்றனர்.கோட்டூர் அரசு மருத்துவமனைக்கு, நான்கு பேர் வரையில் வந்து செல்கின்றனர். நாளுக்கு நாள் தெருநாய்களால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.இவ்வாறு, தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X